வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்

ராகு, கேது ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்த பதி ; திருமகளும் , நவக்கிரகங்களும் வழிபட்டு அருள்பெற்ற தலம் ; நவக்கிரகங்கள் சிவனாரை வழிபட்டு மண்டலாதிபதிகளாக விளங்கும் பேறு பெற்ற தலம் ; லட்சுமி கடாக்ஷம் கிடைக்க வழிபடவேண்டிய சிவத்தலம்..
அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர் – திருவாரூர்
தொலைபேசி எண் :    *+91- 4369 237 454, 94443- 54461,  94423-4604
இருப்பிடம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருநெல்லிக்கா சாலையில் சென்று , திருநெல்லிக்காவை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ( வழி : திருநெல்லிக்கா ) சாலையில் 18 கிமீ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவை அடைந்து , அங்கிருந்து 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
மூலவர் :  வெள்ளிமலைநாதர்
அம்மன்/தாயார் :  பெரியநாயகி
தல விருட்சம் :  தென்னை
தீர்த்தம் :  சிவகங்கை
பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருத்தேங்கூர், திருத்தெங்கூர்
ஊர் :  திருத்தங்கூர்
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் நவக்கிரகமாக லிங்கம் இருப்பது சிறப்பு.
பிரளய காலத்தில் தெளிந்த நீர் தேங்கி இருந்த தலம் என்பதாலும் , தென்னை மரங்கள் நிறைந்த தலம் என்பதாலும் தேங்கூர் என்று அழைக்கப்படுவதாக இருவேறு வரலாறுகள் சொல்லப்படுகின்றன.
திருமகள் வழிபட்ட சிவலிங்க மூர்த்தம் மகாலட்சுமி சந்நிதி எதிரில் திருக்காட்சி அளிக்கிறது.
நாடொறும் ஆறுகால பூசைகள் நடைபெறுகின்றன.
இத்தலம் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர்,
துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது.
இத்தலத்தில் தான் இறைவன்
துர்வாசருக்கு கோபத்தை நீக்கியருளினார் என்பர். 
சூரியன் வழிபட்டதால் அருணபுரம் என்றும்; பிரமன் தீர்த்த உண்டாக்கி
வழிபட்டதனால் பிரமதீர்த்தம் என்றும்; கந்தர்வன் ஒருவனின் குட்ட நோய்நீங்கப் பெற்றதால் குஷ்டரோகஹரம் என்றும்; வழிபடு பயன்கள் எளிதில்பெறத்தக்க தலமாதலின் சர்வ உத்தமபுரம் என்றும்; ஐந்தெழுத்தும் இறைவனை
வழிபட்டதால் பட்சாட்சரபுரம் என்றும்; ஐந்து தீர்த்தங்கள் இருப்பதால்
பஞ்சதீர்த்தபுரம் என்றும்; இறையருளால் அமுதம் கிடைக்கப் பெற்றதால் அமிர்த வித்யாபுரம் என்றும் இதற்குப் பல பெயர்களுள்ளன.
கங்கை வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்.
பீஷ்மர் , துரோணர் , பாண்டவர்கள் வழிபட்டு நலம் பல பெற்ற தலம்.
அகலிகை சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி சிவனாரை வழிபட்டு தன் பாவம் நீங்கி நலம் பெற்ற தலம்.
மூலவர் சற்று உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கியும் , அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்.
நடைதிறப்பு :
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பிரார்த்தனை:
இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள்.
வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார்.
மகாலட்சுமியே பூஜை செய்த இடம் என்றால் கேட்கவா வேண்டும்.
சுவாமியை ரஜதகிரீஸ்வரர் என்றும் சொல்வார்கள். *"ரஜதகிரி'* என்றால் *"வெள்ளிமலை'* என பொருள். இது மேற்கு பார்த்த கோயிலாகும். மேற்கு பார்த்த கோயிலுக்கு கிழக்கு பார்த்த கோயிலை விட அதிக சக்தியுண்டு. மேற்கு சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத்தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.
விழாக்கள் ஏதும் இத்தலத்தில் இல்லை. வழக்கமான பூஜைகளே நடக்கின்றன.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது.
ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர். பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார்.
பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.
 *சிறப்பம்சம்:*
 *அதிசயத்தின் அடிப்படையில்:*
曆 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
曆 இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.
曆 அனைத்துவித நவக்கிரக தோஷங்களும் நீங்க வழிபடவேண்டிய தலம்.
曆 மாசிப் பௌர்ணமியோடு கூடிய திருவாதிரையில் தீர்த்தமாடி சிவனாரை வழிபட்டால் மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
曆 நவக்கிரகங்கள் சிவனாரை வழிபட்டு மண்டலாதிபதிகளாக விளங்கும் பேறு பெற்ற தலம்.
曆 பிரகாரத்தில் நவக்கிரகங்கள் வழிபட்ட கல்லால் ஆன லிங்க மூர்த்தங்கள் பெரிதும் , சிறிதுமாக வரிசையாக அமைந்துள்ளது சிறப்பான ஒன்று மட்டுமல்ல வேறெங்கும் காண இயலாததும் கூட..

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்