ஆன்மிக அதிசயங்கள்
★ஆன்மிக அதிசயங்கள் ★சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. ★திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. ★நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். ★வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை. ★திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது. ★ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர். ★கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது. ★கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல் கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற...