வல்லக்கோட்டை முருகன் ஆலயம்
வல்லக்கோட்டை முருகன் ஆலயம் #murugantemples பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம். 💥புறநானூறில் முருகனைப் பற்றிய குறிப்பு உள்ளது. திருச்செந்தூர் முருகனை செந்தில் என்று அழைத்தார்கள். பழங்காலத்தில் திருச்செந்தூருக்கு 'அல்வாய்' எ பெயரும் இருந்தது. அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்தப் பாட்டில் கூறப்பட்டு உள்ளது. 💥பண்டையத் தமிழர்கள் காடுகள், நதிகள், தீவுகள், சாலை ஓரங்கள், குளங்கள், புத்தம் புதிய கடம்பு மரங்கள் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பண்டையத் தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை திரு முருகாற்று...