வேல்மாறல்
வேல் மாறல் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே (இதையே பன்னிருமுறை சொல்லவும்) 1. பருத்தமுலை சிறுத்த இடை வெளூத்த நகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் 2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே 3. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழு மறத்தைநிலை காணும் 4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிக ராகும் 5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுனை தெறிக்கவர மாகும் 6. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் 7. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர் துணை யாகும் 8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் 9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்து வழி காணும் 10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த...