திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபதாவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
ஆகியவர்களான
மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
ஆகியவர்களான
மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
திருக்கோயில் புராண பெயர்கள்:
ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைல
ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைல
*இறைவன்:* வாஞ்சி நாதேசுவரர், வாஞ்சிலிங்கேசுவரர்.
*இறைவி:* மங்கள நாயகி, வாழவந்த நாயகி.
*தல விருட்சம்:* சந்தனம்.
*தீர்த்தம்:* குப்த கங்கை, யம தீர்த்தம்.
*ஆகமம்:* காமிகம்.
*ஆலய பழமை:*
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதானது.
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதானது.
இருப்பிடம்:
நன்னிலம் - குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது.
நன்னிலம் - குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது.
நன்னிலம் - கும்பகோணம் பேருந்தில் செல்வோர் அச்சுத மங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் 1 A.E பேருந்தில் சென்றால் இத் தலத்தையடையலாம்.
தனிப்பேருந்தில் செல்வோர் கும்பகோணம் - மன்னார்குடிப் பாதையில் சென்று, குடவாசல் கைகாட்டி காட்டும்பக்கம் திரும்பி, திருவாரூர்ப் பாதையில் சென்று, நாச்சியார் கோயிலை தாண்டிப் பிரிகின்ற நன்னலிம் பாதையில் சென்று அச்சுதமங்கலத்தையடைந்து, குடவாசல் திரவாரூர்ப் பாதையில் திரும்பிச் சென்றால் ஸ்ரீ வாஞ்சியத்தை அடையலாம்.
காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும்.
மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3.திருவிடைமருதூர், 4. திருசாய்க்காடு மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.
பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர்.
அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர்.
இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.
தல பெருமை:
சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் மூன்று கோபுரங்களுடனும், மூன்று பிரகாரங்களும் கொண்டவை.
சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் மூன்று கோபுரங்களுடனும், மூன்று பிரகாரங்களும் கொண்டவை.
பிரதான இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.
இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.
அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவியை உடையதால் எமனை எல்லோரும் திட்டியதாலும், பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டும் எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.
இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார்.
மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார்.
அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும்.
மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது.
இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.
*குப்தகங்கை தீர்த்தம்;* மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார்.
கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.
உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.
தலவிநாயகர் அபயங்கர விநாயகர் என்ற பெயருடன் இங்கு விளங்குகிறார். இக்கோவிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உருவச்சிலைகள் உள்ளன.
மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.
இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும் நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.
*வழிபாட்டு மரபு:*
திருக்கோவிலுக்கு வந்தபோது, கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
திருக்கோவிலுக்கு வந்தபோது, கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
இத்தலத்தில் இருக்கும் குப்த கங்கையில் முதலில் நீராடினோம். பின்பு அருகே இருந்த கங்கைக் கரை விநாயகரை அவருக்குண்டான முறையில் தோப்புக்கரணமிட்டு வழிபட்டோம்.
அதன்பிறகு எமதர்மராஜன் இருக்கும் தனிசந்நிதிக்குள் நுழைந்தோம். அவனை மனமுருக மன அழுக்கு நீங்க பிரார்த்தித்து வழிபட்டுக் கொண்டோம்.
பின்னர் இவருகே அருகிலிருக்கும் அனுக்கிரக விநாயகர்யும், பாலமுருகனை வழிபட சிரம் மேல் கைகுவித்து கைதொழுதோம்.
அதன் பிறகே மூலவரான வாஞ்சிநாத சுவாமியையும், மங்களாம்பிகைகளையும் தரிசனம் செய்ய சென்றோம்.
வழிபாடு மாறி வணங்குகிறீர்களே! என நினைக்கத் தோன்றுகிறதா? ஆமாம்!. வழிபாடு மாற்றம் உண்டு.
இத்தலம் வரும் பக்தர்கள் இவ்விதமே வணங்கி வரவேண்டுமென்று மற்றும், முதலில் யமபூஜைக்கு பிறகே தனக்கு வழிபாடு நடக்கவேண்டுமென்று இறைவன் இத்தலத்திற்கு வருபவர்களுக்கு மரபை விதித்திருந்தார்.
அதுபோலதான் அந்த மரபை நாம் கடைபிடிதாதோம்.
மூலவர் சந்நிதிக்கு வந்தபோது, கட்டுக்கடங்காத கூட்டம். வெகுநேரம் பொறுமை காத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈசன் தரிசனம் செய்தோம்.
நேரம் அதிகமாக கடந்து போயினும், ஈசனின் பரிபூரண அருட்பார்வையை நன்கு கிடைக்கப் பெற்றுக் கொண்டது மிக சந்தோஷமாக இருந்தது.
அடுத்து அம்மை ஆலயத்துள் உள் புகுந்தோம். சுவாமிக்கு இருந்த அதே அளவு பக்தர்கள் கூட்டம் இங்கேயும் இருந்தது.
அம்மனின் அருட்பார்வைகளை நாம் காணப்பெற்றதும், நம்
உடல் சிலிர்ப்புடன் பக்திப் பிரவாகமெடுத்தது.
உடல் சிலிர்ப்புடன் பக்திப் பிரவாகமெடுத்தது.
அம்மையை மனங்குளிர ஆராதித்து வணங்கி குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.
தொடர்ந்து அறுபத்து மூவர் நாயன்மார்கள் சன்னிதி, வழியாக ஒருக்களித்து நடந்து அறுபத்துமூவரையும் தொடர்ச்சியாக முன் வந்து நின்று கை தொழுது நகர்ந்தோம்.
பிராகாரத்தில் தொடர்ந்து மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வெண்ணெய் விநாயகர், ஜேஷ்டாதேவி, பஞ்சபூத லிங்கங்கள் ஆகியோரையும் வணங்கித் தொழுது வெளிவந்தோம்.
*சிறப்பம்சம்:*
திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. அறுபத்து நான்கு சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர், காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது.
திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. அறுபத்து நான்கு சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர், காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது.
சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.
உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைந்த வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது.
மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள் என்கிறார்கள்.
இத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம்.
*திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள்:*
பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன், எமதர்மர், பைரவர், கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர், வசிஷ்டர், வால்மீகி
ஆகியோர்.
பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன், எமதர்மர், பைரவர், கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர், வசிஷ்டர், வால்மீகி
ஆகியோர்.
பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்களான அறுபத்து நான்கில் மிகவும் முக்கியமானது திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம்.
இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தோன்றியதாகவும் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட்டு வணங்கி வருகின்றன.
இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்த சிறப்பைப் பெறுவார்.
இங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால், அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.
இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் நினைக்கிறானோ அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.
எவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி *திருவாஞ்சியம்* என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.
திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை என்று கூறப்படும் எதிர்வினைகள் இருப்பவர்களுக்கு அறவே அகன்று தூய்மை பெறுவார்கள்.
கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.
இன்றும் இத்தலம் வந்து விவாகரத்து பெற்ற தம்பதிகள் இங்கு வந்து வழிபட்டதன் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.
இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட, நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம் இது உறுதி.
தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.
இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீருகிறது.
ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் உள்ளதை இங்கு காணலாம்.
சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.
*தல அருமை:*
"காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் இது.
"காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் இது.
இத்தலத்தில் திருமால்
சிவனை வழிபட்டு, இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
சிவனை வழிபட்டு, இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும்.
திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம்.
யமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார்.
அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி யமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார்.
தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார்.
மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார்.
இத்தலத்தில் இயமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு என கூறுகிறார்கள். அது சரிதானா? என விசாரிக்க, அது சரிதான் என்று விளக்கம் தந்தனர்.
*சிறப்பு:*
இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.
இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.
இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.
யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்றாகும்.
கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது என்பது சிறப்பு.
எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் தான் திருவாஞ்சியம்.
வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே எல்லோரிடமும் உண்டு. எழுந்து நடமாட முடியாத முதியவர்கள் கூட இன்னும் வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
கடும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களும், நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்களே ஒழிய, மரணம் சம்பவித்து விடக் கூடாது என்ற அச்சம் கொள்வார்கள்.
ஒருவருக்கு மரண பயம் வந்து விட்டால், எவராலும் அவரைத் தேற்ற முடியாது. மரணத்தை விடவும் கொடியது மரண பயம் மட்டுமே!
எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் ஒன்று உள்ளதென்றால் அதுதான் திருவாஞ்சியம் ஆகும்.
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.
காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, *‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம்* இது என்றார்.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, *கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’* என்றும் கூறினார்.
இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு *‘வாழ வந்த நாயகி’* என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.
சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.
*‘திரு’* என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் *‘திருவாஞ்சியம்’* என்று பெயர் பெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இருவரும் இங்கு சேர்ந்து வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும், சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த *‘ஸர்வா’* என்ற முனிவர் துடித்துப் போனார். கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை அவரை வருத்தியது.
அப்போது *‘திருவாஞ்சியம்’* என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார்.
அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது. இதனால் முனிவர், *‘சிவாய நம.* *திருவாஞ்சியம் அபயம்’* என்று கூறியபடியே சென்றார்.
பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார்.
ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது *‘கலிமங்கலம்’* என்று வழங்கப்பட்டு வருகிறது.
கலியுகத்தில் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களைந்தொழிக்கும் திருத்தலம் திருவாஞ்சியம் ஆகும்.
காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது.
காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார்.
ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை.
இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருள்கிறார்.
இவர் நாய் வாகனமும் இங்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் எடுத்துறைக்கிறது.
இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மிகுந்த தனம் பெறலாம் என்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள். இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன் கங்கா தீர்த்தத்தில் நீராடிய பலனைத் தந்தருளுகிறாள்.
தட்சனின் யாகத்திற்கு சென்றதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட சூரியன் தனது ஒளியை இழந்தான். பின்னர் இந்த தீர்த்தத்தில் நீராடிதான் தனது ஒளியைப் பெற்றான் என்பது தல வரலாற்றில் காணலாம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
1.புரிநூலர் புணர் முலை உமையவளோடு
மருவனார் மருவார் பால் வருவதும் இல்லை நம் அடிகள்
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திருவாஞ்சியத்து உறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.
1.புரிநூலர் புணர் முலை உமையவளோடு
மருவனார் மருவார் பால் வருவதும் இல்லை நம் அடிகள்
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திருவாஞ்சியத்து உறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.
நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர்; முப்புரி நூலை அணிபவர்; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர்; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர்.
2. தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத்து ஒதுங்க
கறுவிலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறுவிலாத வெண்ணீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.
செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத்து ஒதுங்க
கறுவிலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறுவிலாத வெண்ணீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.
பசுக் கூட்டத்துள், இளைய ஆனேறு, கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி, வயல்களில் உள்ள வாளை மீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல் மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல், சிறந்ததொரு கருத்தை உடையது.
3. தூர்த்தர் மூவெயில் எய்து சுடு நுனைப் பகழி அது ஒன்றால்
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்தமாம் மலர்ப் பொய்கைத் திகழ் திருவாஞ்சியத்து அடிகள்
சாத்து மாமணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்தமாம் மலர்ப் பொய்கைத் திகழ் திருவாஞ்சியத்து அடிகள்
சாத்து மாமணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.
தீர்த்தமாகிய, சிறந்த பூக்களையுடைய பொய்கைகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து, ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு, ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது; இது வியப்பு!.
4. சள்ளை வெள்ளையம் குருகு தானது ஆம் எனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே.
வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே.
சள்ளை என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின், வாளை மீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தெளிவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர்.
5. மைகொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண் பிறையோடு பாம்புடன் வைப்பது பரிசே.
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண் பிறையோடு பாம்புடன் வைப்பது பரிசே.
கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மலைமகளோடு உடன் உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடை முடியையும் உடைய அழகராகிய, நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில், தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற, புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு, இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு.
6. கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையும் சூடிப்
பரந்த பாரிடம் சூழ வருவர் நம்பரமர் தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ் திருவாஞ்சியத்து உறையும்
மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.
பரந்த பாரிடம் சூழ வருவர் நம்பரமர் தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ் திருவாஞ்சியத்து உறையும்
மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.
தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும், கூவிள இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும், நம் இறைவரும் ஆகிய, திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர், தம் அடியாரை, வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர்.
7. அருவி பாய்தரு கழனி அலர் தரு குவளையம் கண்ணார்
குருவியாய் கிளி சேர்ப்பக் குருகினம் இரிதரு கிடங்கில்
பருவரால் குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.
குருவியாய் கிளி சேர்ப்பக் குருகினம் இரிதரு கிடங்கில்
பருவரால் குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.
மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர், நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும், கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால், குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற, பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், `மால், அயன்` என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது, ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம்.
8. களங்களார் தரு கழனி அளிதரக் களிதரு வண்டு
உளங்களார் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி
குளங்களால் நிழல் கீழ் நல்குயில் பயில் வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.
உளங்களார் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி
குளங்களால் நிழல் கீழ் நல்குயில் பயில் வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.
ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வண்டுகள், கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை, மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை, குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது, ஒளி வீசுகின்ற, தாமரை மலர்போலும் திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர்.
9. வாழையின் கனி தானும் மது விம்மி வருக்கையின் சுளையும்
கூழை வானரம் தம்மில் கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்
ஏழை பாகனை அல்லால் இறையெனக் கருதுதல் இலமே.
கூழை வானரம் தம்மில் கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்
ஏழை பாகனை அல்லால் இறையெனக் கருதுதல் இலமே.
வாழைப் பழங்களையும், சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும், `எனக்கு வைத்த இப்பங்கு சிறிது` என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து, தாழை மட்டையும், வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை, யாம் `கடவுள்` என்று நினைத்தல் இலம்.
10. செந்நெல் அங்கு அலங்கு கழனித் திகழ் திருவாஞ்சியத்து உறையும்
இன்னலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன்னலங்கல் நன் மாடப் பொழிலணி நாவல் ஆரூரன்
பன்னலங்கல் நன் மாலை பாடுமின் பத்தர் உளீரே.
இன்னலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன்னலங்கல் நன் மாடப் பொழிலணி நாவல் ஆரூரன்
பன்னலங்கல் நன் மாலை பாடுமின் பத்தர் உளீரே.
செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், இனிய மாலைகளையணிந்த சடையையுடைய எம் இறைவனது, ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த, பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய, சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது, பல அழகுகளையுடைய, கற்கத் தகுந்த நல்ல பாமாலையை, அடியராய் உள்ளவர்களே, பாடுமின்கள்.
*தேவாரம்:*
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான்தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.
பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.
பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக.
புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.
புற்றில் ஆடும் இயல்புடைய பாம்பினோடு கங்கையும், பிறையும் பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப்பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை.
அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே.
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே.
நம் தேவதேவராகிய இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும் தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும்நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை இடப்பாற்கொண்டு தங்குவார்.
நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிக ளுறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.
ஆறு சூடும் அடிக ளுறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.
திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல் வளமுடைய திருவாஞ்சியத்தைத் தௌந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும்.
அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவா னுறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
குற்ற நற்றுணை யாவா னுறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
பாசக்கட்டுகள் நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள் சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன்.
அருக்க னங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.
சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.
Comments
Post a Comment