Posts

Showing posts with the label #murugantemple

வல்லக்கோட்டை முருகன் ஆலயம்

வல்லக்கோட்டை முருகன் ஆலயம்  #murugantemples பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம். 💥புறநானூறில் முருகனைப் பற்றிய குறிப்பு உள்ளது. திருச்செந்தூர் முருகனை செந்தில் என்று அழைத்தார்கள். பழங்காலத்தில் திருச்செந்தூருக்கு 'அல்வாய்' எ பெயரும் இருந்தது. அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்தப் பாட்டில் கூறப்பட்டு உள்ளது. 💥பண்டையத் தமிழர்கள் காடுகள், நதிகள், தீவுகள், சாலை ஓரங்கள், குளங்கள், புத்தம் புதிய கடம்பு மரங்கள் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பண்டையத் தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை திரு முருகாற்று...

முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்

 முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்   அருள்மிகு முருகீஸ்வரர் திருக்கோவில் தையூர்-603103  செங்கல்பட்டு மாவட்டம்  இருப்பிடம்:  கேளம்பாக்கம் 5 கிமீ, திருப்போரூர் 8 கிமீ, சென்னை சென்ட்ரல் 40 கிமீ, செங்கல்பட்டு 32 கிமீ, மகாபலிபுரம் 12 கிமீ  மூலவர்: முருகீஸ்வரர், அழகிய சொக்கநாதர் அம்மன்: மரகதாம்பிகை நாயகர்: தைக்கஜ முருகன் (மணல் கல்லால் ஆனது) தலமகிமை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முருகீஸ்வரரும் தாயாராக மரகதாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். கோவில் கல்வெட்டுகளில் அழகிய சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை (தைக்கஜ முருகன்) மணல் கல்லால் ஆனது என்பது சிறப்பம்சமாகும். தையூரில் உள்ள திருக்குளத்தில்  முருகப்பெருமான் நீராடி தந்தை முருகீஸ்வரனை வழிபட்டுச் சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனால் தையூர் கோவில் முருகன் வழிபட்ட சிறப்பான தலமாகக் கருதப்படுகிறது. தெப்பக்குளத்தில் முருகனே நீராடியதால் தீராத வியாதிகள் தீரும், பில்லி...

திருப்போரூா் கந்தசுவாமி கோவில்

திருக்கோயில் வரலாறு: திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. திருப்போரூா் கந்தசாமி கோவிலை சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் கூறலாம். தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும். மூலவர் : கந்தசுவாமி அம்மன்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வன்னி மரம் ஊர் : திருப்போரூர் மாவட்டம்: செங்கல்பட்டு மாநிலம்: தமிழ்நாடு பாடியவர்கள்: அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி வரலாறு : இன்று இங்குள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான். என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது. விக்கிரம சோழன...