Posts

Showing posts with the label நட்சத்திர திருக்கோயில்

அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

Image
அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி  திருக்கோயில்  அருணகிரிநாதருக்கு முருகபெருமான் வேடன் வடிவில் வந்து இந்த கோவிலுக்குவர வழி காட்டிய ஸ்தலம்.முருகபெருமானின் அருள் நிறைந்த            தலம் என்று குறிப்பிடும் படியாக மயில்கள் இந்த மலையில் நிறைந்து காணபடுகின்றன.    திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் இருந்து ௨௦க்ம தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது  கோவிலின் வரலாறு  அன்றைய நாட்களில் வாகை எனும் மரங்கள் இங்கு நிறைந்து இருந்தன. அந்த காலத்தில் வேடன் ஒருவன் வேங்கையை துரத்தி சென்றான். அப்போது அவனுக்கு போக்கு காட்டிய வேங்கை இங்கும் அங்கும் ஓடியது. அதனை அவன் துரத்தி சென்றான். முடிவில் அது இங்கு வந்து இங்குள்ள வாகை மரத்தின் இடையில் மறைந்து போனது. அப்போது அங்கு திடீர் என்று மயில் தோன்றியது மேலும் விபுதி வாசனை தோன்றியது. அதை கண்ட வேடன் இங்குள்ள மக்களிடம் எடுத்துக்கூறி இங்கு முருகனுக்கு ஆலயம் அமைந்ததாக வரலாறு கூறுகிறது.    

உங்கள் நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். ஆலயங்களும், அமைவிடங்களும் அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்* இருப்பிடம்:திருவாரூரில் இருந்து ...