தேவிகாபுரம்
தேவிகாபுரம் :
❃ தேவிகாபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். போள ர்-சென்னை நெடுஞ்சாலையில் போள ரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவண்ணாமலை கோவிலுக்கு அடுத்த நிலையில், நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது இத்திருத்தலமாகும்.
❃ இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
Comments
Post a Comment