Posts

Showing posts with the label Vaidyanaatha Ashtakam

வைத்யநாதாஷ்டகம் தீராத நோய் தீர்க்கும்

வைத்யநாதாஷ்டகம் Vaidyanaatha Ashtakam தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம் சொல்லப்பட்ட எட்டு ஸ்லோகங்களை உளமாறச் சொல்வோருக்கு வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் மூன்று நாமாக்களையும் (வாலாம்பிகேச, வைத்யேச, பவரோக ஹரேதிச) தினமும் ஜபிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடிய நோய்கள் விலகும். 🌺🌿ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 🌺🌿ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன். 🌺🌿கங்காப்ரவாஹேந்து ஜடாதராய த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே ஸமஸ்த தேவைரபி பூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 🌺🌿கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும்...