மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் :

     மதுரைக்கே நடுநயமாக கம்பீரமாகவும் ஓங்கி உயர்ந்து நான்கு திசைகளில் அழகிய கோபுரத்துடன் விளங்குவது மீனாட்சியம்மன் திருக்கோவில் ஆகும்.
இக்கோவிலில்மின்னும் அழகிய மூக்குத்தியுடன் மதுரை மண்ணை காத்து நிற்கும் அன்னை மீனாட்சி அம்மன் திருகோலம் காண கண்கோடி வேண்டும்.
பலநூறாண்டாக சித்திரையில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாகும்
.

கிழக்கு 
                       மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோவில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். 

                        இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோவிலை மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றும் அழைக்கின்றனர்.


மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.



மேற்கு 
வடக்கு 
தெற்கு 

கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என கம்பீரமாக நான்கு திசைகளில் காணப்படும் நான்கு கோபுரங்களும் அதை சுற்றி உள்ள வீதிகளும் காண அத்துணை அழகு .

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்