பிரம்ம ஞானம் பெறும் முறை:
பிரம்ம ஞானம் பெறும் முறை: ***************************************** 1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் : " தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர் 2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி : பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது 3, உள்நோக்கு சிந்தனை : ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும். 4, பாவங்களிலிருந்து வெளிப்படல்: ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம் 5. நற்குண நற்செயல்கள்: உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது 6, நல்லவை, இனியவை: நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடை...