போற்றித்திருவிருத்தம் மற்றும் போற்றிவிண்ணப்பம்
முருகப்பெருமானின் அருள் வழங்கும் போற்றித்திருவிருத்தம் (திருவருட்பா) மற்றும் போற்றிவிண்ணப்பம் (பாம்பன் சுவாமிகள்) திருச்சிற்றம்பலம் 1. கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி. 2. பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி. 3. மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி. 4. தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி சிவம்பெறும் பயனே போற்றி செங்க...