Posts

Showing posts with the label திருப்பரம் குன்றம்

உனைத் தினம் | திருப்பரங்குன்றம் திருப்புகழ்

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) அருணகிரிப் பெருமான், நாம் அன்றாடம் செய்ய வேண்டிய, எப்போதும் எல்லா சமயத்திலும் செய்ய வேண்டிய, ஆனால் செய்யத் தவறும் சிலவற்றைத் தன்னுடைய தவறுதல்களாகப் பட்டியலிட்டு நம் சார்பில் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். காலன் வரும்போது காட்சி பெற வேண்டும் என்பதே அது. அந்தக் கடைசி நேரத்தில் இறைவனுடைய எண்ணம் மனத்திலே அழுந்த நிற்க வேண்டுமானால், அதற்காக இப்பொழுதிலிருந்தே ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்துப் பழகினாலொழிய, யமபயம் வருத்தும் அந்த இடர்ப்பாடான தருணத்தில் இறைவனுடைய நினைப்பு வருவது என்பது சற்றும் முடியாத ஒன்றே. அதைத்தான் இந்தத் திருப்பரங்கிரித் திருப்புகழில் சொல்லி, இறைவனிடம் நமக்காகக் கையேந்துகிறார்.) 🌺தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ......