எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்) திருப்புகழ்
எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்) (வைத்தீசுரன் கோயில் புள்ளிருக்குவேளூர் என வழங்கப்படும். இறைவன் வைத்தீசுரன் என்னும் வைத்திய நாதப் பெருமான். அம்பாள் தையல்நாயகி. இங்கு முருகனுக்கு முத்துக்குமரன் என்னும் திருநாமம். இத்தலம் மிகவும் பிரசித்தமான பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. நாம் எத்தனையோ ஜன்மம் எடுத்து துன்பப்பட்டுவிட்டோம். இனி முருகன் பாதம் அடைந்து அருள் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திருப்புகழ் படித்து முருகன் அருள் பெறலாம். எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமா...