Posts

Showing posts with the label திருக்கோவில்

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை             மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது உலக புகழ் பெற்றது அந்த மீனாட்சி அம்மனின் வரலாறுடன் தொடர்பு கொண்ட மதுரையில் உள்ள முக்கியமான ஒரு திருத்தலம் இந்த இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில். மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்திற்கு மிக அருகிலும் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் அருகிலும் உள்ளது. மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சி அம்மனை மணமுடித்த சுந்தரேஸ்வரர்(சிவபெருமான்) திருமணத்திற்கு பிறகு மலையத்துவஜன் ஆண்ட மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்கும் முன்பு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்து பொறுப்பேற்று கொண்டார். அப்படி சிவபெருமானே சிவலிங்கத்தை பூஜித்த ஸ்தலம் இதுவாகும். இத்திரு கோவிலானது மேற்கு நோக்கி உள்ளது. இங்கு சிவலிங்கமானது கிழக்கி நோக்கி இருக்க சிவபெருமானும் அன்னையும் மேற்கு நோக்கி  இருந்து சிவலிங்கத்தை பூஜிக்கும் வகையில் இருப்பதால் நாம் லிங்கத்தின் பின்புறத்தை தரிசிக்கும் படியாக வித்தியாசமாக அமையபெற்ற ஸ்தலம் ஆகும். இம்மை மறுமை என இரு வகையான பிறவிகளில் இம்மை பிறவி (இந்த பிறவி ) யில் செய்த நல்லவற்...