அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை,
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம். காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விராலி மலைத் திருப்புகழ் கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன் சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன் தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல் சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப நபோமணி சமான துங்க ...... வடிவேலா படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான் விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீது கந்த ...... பெருமாளே. இறைவன் : மூலவர் – ...