முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்
முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில் அருள்மிகு முருகீஸ்வரர் திருக்கோவில் தையூர்-603103 செங்கல்பட்டு மாவட்டம் இருப்பிடம்: கேளம்பாக்கம் 5 கிமீ, திருப்போரூர் 8 கிமீ, சென்னை சென்ட்ரல் 40 கிமீ, செங்கல்பட்டு 32 கிமீ, மகாபலிபுரம் 12 கிமீ மூலவர்: முருகீஸ்வரர், அழகிய சொக்கநாதர் அம்மன்: மரகதாம்பிகை நாயகர்: தைக்கஜ முருகன் (மணல் கல்லால் ஆனது) தலமகிமை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முருகீஸ்வரரும் தாயாராக மரகதாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். கோவில் கல்வெட்டுகளில் அழகிய சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை (தைக்கஜ முருகன்) மணல் கல்லால் ஆனது என்பது சிறப்பம்சமாகும். தையூரில் உள்ள திருக்குளத்தில் முருகப்பெருமான் நீராடி தந்தை முருகீஸ்வரனை வழிபட்டுச் சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனால் தையூர் கோவில் முருகன் வழிபட்ட சிறப்பான தலமாகக் கருதப்படுகிறது. தெப்பக்குளத்தில் முருகனே நீராடியதால் தீராத வியாதிகள் தீரும், பில்லி...