Posts

Showing posts with the label indian temples

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபதாவது சிவத்தலமாகும். தேவாரம் பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியவர்களான மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருக்கோயில் புராண பெயர்கள்: ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைல *இறைவன்:* வாஞ்சி நாதேசுவரர், வாஞ்சிலிங்கேசுவரர். *இறைவி:* மங்கள நாயகி, வாழவந்த நாயகி. *தல விருட்சம்:* சந்தனம். *தீர்த்தம்:* குப்த கங்கை, யம தீர்த்தம். *ஆகமம்:* காமிகம். *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதானது. இருப்பிடம்: நன்னிலம் - குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது. நன்னிலம் - கும்பகோணம் பேருந்தில் செல்வோர் அச்சுத மங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் 1 A.E பேருந்தில் சென்றால் இத் தலத்தையடையலாம். தனிப்பேருந்தில் செல்வோர் கும்பகோணம் - மன்னார்குடிப் பாதையில் சென்று, குடவாசல் கைகாட்டி காட்டும்பக்கம் திரும்பி...