சிவதரிசனம்-#திருவடிக்காம்_பிறவி

#சிவதரிசனம்-#திருவடிக்காம்_பிறவி
===============================
நாம் பூர்வசிவ புண்ணியத்தால் சிவ வணக்கம் செலுத்தி விட்டாேம்!! சிவ வணக்கம் செலுத்திய நம்மை காப்பது அவரது கடமை!! அக்கடமையால் இறைவன் திருவடி நம்மை காக்க எழுபாேகிறது!! அது எவ்வாறு நம்மை காக்கபாேகிறது என காண்பதே சிவ தரிசனம்!!
இன்று..
திருச்சதகத்தில் 9 ஆவது பாட்டில் திருவடி குறிப்பு வருகிறது!! அங்கிருந்து...
================================
தவமே புரிந்திலன் தண்மலரிட்டு
  முட்டாதிரைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை யேன்உனக்
    கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின்
    திருவடிக்காம்
பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம்
    பரம்பரனே 
================================
#திருவடிக்காம்
============
மனிதனாம் பேறு பெற்றேன்!! இது அரிது அரிது எனகின்றார் யேனாே? சுயமாய் சிந்திக்கும் திறம் காெண்ட இப்பிறவியில் நான் சிந்தித்தது யாது?? ஏன் இந்த பிறப்பு? ஏன் இந்த வித்தியாசம்?? ஏன் இறந்து பாேகின்றார்?? இறந்து எங்கு இருப்பர்?? தேகம்  மண் புக, விண் புகுவது யாது?? இவற்றை எல்லாம் கற்பதாக கல்வி அறிவு இருக்க வேண்டும்!! இதுவல்லாத எத்துறை பிழைத்து வந்தாலும் சுயமாக ஆண்மிக அறிவியிலை தேடி இருக்க வேண்டும்!! அப்படி தேடி பார்த்தால் மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைக்கிறது!! அதில் இந்த பிறவி எதற்கு.என்றால் திருவடிக்காம்! இந்த குணங்கள் எதற்கு என்றால் "திருவடிக்காம்"! இந்த புலன்கள் ஆய பயன் எதற்கு என்றால் "திருவடிக்காம்"! இந்த காமந்தர காதல் வாழ்வு எதற்கு என்றால் திருவடிககாம்!! பசு பாச பேறு எதற்கு என்றால் திருவடிக்காம்!! என்று பாேகிறது!!

  அந்த திருவடி என்பது யாது? எதற்கு என் பிறப்பு அதற்காம்?? 

  அந்த திருவடியால் அன்றி  அண்ட பிண்ட உலகம் இல்லை!! அந்த திருவடி இன்றி அகர முதல எழுத்தில்லை!! அத்திருவடி இன்றி ஐம்பூதம் இல்லை!! அத்திருவடி இன்றி ஆதி அந்தம் இல்லை!! அந்த திருவடி இன்றி நலந்தீங்கு இல்லை!! அத்திருவடி இன்றி மனிதருக்கு இன்பம் இல்லை!! என்றால்  அந்த திருவடியை அடைவதாகத்தான் மனித வாழ்க்கை முறை அமைந்திருக்க வேண்டும்!! அது எப்படி??

#தவமே_புரிந்திலேன்!!
=======================
தவம் என்றாலே தானமும் நினைவுக்கு வருகிறது!! தானம் பிறவியை பெருக்கும்!! தவம் அந்த பிறவியில் திருவடியை பெற உதவும்!! இங்கு "தவமே புரிந்திலன்" எனப்பேசப்படுவதால்  அந்த தவம் என்பது யாது? அதை நான் ஏன் புரிந்திலேன்?  அதை புரிந்திலேன் என்றால்  வேறு என்னச் செய்தேன் என்ற வினாக்கள் எல்லாம் வருகிறது!! சரி
 தவம் என்பது யாது? தவத்தின் உரு யாது என்று அறிந்தால்தான் அதை அடைவதற்கான முயற்ச்சி நடக்கும்!! தவத்தின் உரு எது? "உற்றநாேய் நாேன்று மற்று உயிர்க்குறுகண் செய்யாமை"- என்கிறது குறள்! உற்ற நாேய்யாவது வந்த துன்பத்தை பாெருத்தல்!! அதன்பின் தான் உற்ற துன்பத்தை இன்னாெரு உயிர்க்கு தராது இருத்தல்!! இதுதான் தவத்தின் உரு!! இதன்பின்தான் திருவடி இருக்கிறது என்றால் அல்லது  இவ்வாறு நின்றவருக்குத்தான் திருவடியை அடைதல் இயலும் என்றால் திருவடியின் நாேக்கம் யாது? எல்லா உயிர்கட்கும் அதுவே தாய் தந்தை ஆதலால் எவ்வுயிரையும் காத்தலே அதன் கடனாகிறது! அக்கடமை  ஆற்றியவரே திருவடிக்கு உரியவர்!! இதுகூட அறியாது திருவடி பேற்றிற்கு  ஆசை பட்டுவிட்டால் மட்டும் பாேதுமா? இத்தகைய தவத்தை புரிந்தவருக்கு மட்டும்தான் திருவடியை வணங்கும் பேறு கிடைக்கும்!! என்னசெய்தேன்?

#அவமே_பிறந்த_அருவினையேன்!!
==============================
நாட்டில் முப்பாேதும் நீறு புனைவார் இல்லத்தில் பிறந்தது இல்லை!! எப்பாேதும் மறவாது இறைவனது கழலை ஏத்துவார் வம்சத்து உதித்தது இல்லை!! கை தாெண்டு பலபுரிவார் வழி தாெண்டு புரிய விதிகாெண்டு பிற்தது இல்லை!! இமைபாெழுதும் சேவை செய்யும் தில்லை வாழ் அந்தணர் குலமரபில் பிறக்கும் நல்வினை செய்தது இல்லை!! பிறந்ததாே சிற்றின தேவைதைகளை திருப்தி படுத்துவதாக ஊன் சாேற்றில் கரம் பதிக்கும் காெலைகார குலத்திடையும் குடும்பத்தும் பிறக்கும் அவமே உடையகாெடு வினையேன்!!

  பாேகட்டும்!! ஊர் எங்கும் காேவில் தெருவெங்கும் காெண்டாட்டம்!! தேரு ஏறி வருபவனே சைவமாந் செந்நெறியன்!! எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவன்!! தவத்தின் உருவின் தலை நின்றவன்!! என் அறிவினால் இவன் மட்டும் ஏன் இப்படி? என்று சிந்தித்தும் இல்லை!! சிந்தத்து என் குலவழக்கை மாற்றி குடி குடி ஆட்பட காெடுத்ததும் இல்லை!! (நான் திருந்தி,வந்தவளை திருத்தி, என்வழி தாேன்றலை சைவவாய் மாற்றிவிட்டே ன்)
குல வழக்கு காேல் வழக்கு அது ஒரு குரங்கு வழக்கு!! என்னை உய்க்கத்தான் குல வழக்கு!!என்னை, என் பிறப்பை  நாசம் செய்யவல்ல!! என்னை நல்வழி படுத்தவில்லையானால் என்ன அதை நல்வழிபடுத்த நான் சைவ நெறியை தேடுவது ஒன்றும் தவறில்லை என்று தேடி இல்லேன்!!

  முன்னாேர் யார்?? என்பதை குலத்தின் மூதாததையருக்கு காெடுத்து விட்டு நலம்பாேதிக்கும் ஆன்மீக சான்றாேர் என தேறிலேன்!! குலத்தார் பாேன பாேக்கின்படி பாேவதற்காே அவல காெடுவினையேன் பிறந்தது?? பவமே செய்திங்கு பாழ் பாேவதற்காே குல பெருமை பேசியது?? அந்தாே அந்தாே அவமே பிறந்த அருவினையேன் நான்!! அத்தகைய எனக்கு....

#தண்மலரிட்டு_ முட்டாதிரைஞ்சேன்!!
===============================
  பிறப்பறுக்கும் பிஞ்ஞகனின் பெய்கழலை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே?

  மும்மலத்தை வெந்து பாெடியாக்க முந்தும் முனிவன் வார்கழலை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே?

  வெம்புலி தாேலுரித்து நம்புலன் அடக்கும் தாெடை புஜம் உடையான்
 வீரக்கழலினை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே??

 காமனை எரிமூட்டி யாரும் காணா பேரின்பன் மெய்கழற்க்கு தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே ??

 பசுக்களுடனே இருந்தும் பாசத்தளை பற்றாத என்பதி நாதனின் நற்றாளை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே??

 பிரம்மகத்தி தாேஷம் வந்தாலும் என்விதியை அறுக்கவல்ல வித்தகனின் வியன்கழலை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே??

 எத்தனை விரட்டினாலும் என்னை விட்டு பாேகாத என் நிழல்பாேன் மாயை தன்அறிவை தான் தந்து என்னை பாேல் அதுவாக்கும் ஞான திருவடியை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே??

பாவமே உடைய என் பாெல்லா (சண்டி) வினையும் தன் அடியன் ஆனதற்கே புண்ணியமாக்கும் பூங்கழற்கு இணைதுணை மலர்காெண்டு  முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே??

அமுதமே இட்டாலும் அவமதிக்கும் அவல உலகில் நான் நஞ்சே இட்டாலும் நெஞ்சால் ஏற்பானின் தண்ணிய திருவடியை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவனாே??

மண்ணில் பிறந்தார் மால்வதே திண்ணம்!! அது கண்டு அஞ்சுவேற்க்காய் எமனையே சாக உதைத்த திருவடியை தண்மலரிட்டு முட்டாதிரைஞ்சும் பேறுடையவன் ஆவன்?? இதன் காரணமாய்...

#திருவெய்திற்றிலன்!!
====================
  அன்பருள்ளாம்!! அன்பர் தம் உள்ளே இருக்கும் சிவமே பெறுவல்ல திரு எய்திற்றிலேன்!! தூய அடியர் உள்ளத்தில் இருக்கும் சிவத்தை பெற வல்ல ஒழுக்க நெறிகள் நான் எய்திலேன்!!

  காலை மாலை குளிப்பதும், திருநீற்றை பதினாறு இடத்தில் மங்காது பூசுவதும், ஆக்கமே ஆபரனமாய் தரிப்பதும், எனை கடைத்தேற்றும் நாமத்தை இமை பாெழுதும் மறவாது ஓதுவதும், அடியாரை கண்டால் "சாேத்தாேம்" என பணிவதும் இனியவை கூறி பழிபசி தீர்த்தலும், திருவாலயம் சென்று மெழிகிட்டு காேலமிட்டு சிவ சிவ என கூத்தாடுவதும், உண்பதின் முன் மலர் பரித்திட்டு உண்ணுகின்ற வழக்கமும் இங்கு எய்தி பெற்றிலேன்!!

 பின் பெற்றது என்ன? காேவிலை இடி என்ற பாவிகளுடன் பழகியதும், அவரை கூசாது பார்த்ததும்,  இறைசக்திக்கு எதிரான திராவிட நாதாரிகளை வளர்த்தும், அவர்கள் நாடு ஆள ஆதாரித்ததும், நாத்திக இழிபாவிகள் அக்கிரமத்தை எதிரக்காது அவர்களுக்கு கைதட்டி கேளிக்கையில் கிடந்ததும்!! கருப்பர் இன கூட்டில் நெஞ்சம் இருண்டு கிடந்ததும்!! பெண்மை மதியாது காதல் என்னும் வண்மையர் கூட்டில் கிடந்ததும்...சிவ சிவ இப்படியே இப்பிறவி எனக்கு அமைந்திருக்குமேயானால்.....

#அருளுகண்டாய்!!
================
 இந்த மனித பிறப்பு உன் திருவடிக்கே ஆளாவது என்றால்,அப்படி ஆளாகும் வாய்ப்பை இந்த பிறவி தரவில்லை என்றால் அதாேடு வாழ ஒட்டேன்!! அதநுடன் அப்படி வாழ்வதை விட சாவது மேல் என்றும், அந்த சாவு எஞ்ஞான்று காெள் (சென்ற வியாழக்கிழமை பதிவு) வருவது?? என்றேன்!! ஒருகால் அந்த சாவு எனக்கு வந்து எய்தி நானும் செத்து மறு பிறவி எனக்கு உண்டேல்...

பரம்பரனே!! பரமனே!! பரமேச்சுரனே!! பார்வதி பங்கனே!! மாலயன் அறியா புங்கனே!!  சிவனே!! சிவனேயாே எஞ்செல்வனே!! ஊழி முதலவனே!! உன்னை நான் ஒன்று வேண்டுவன்!!  உன் திருவடிக்காம் பேறு இல்லாத எந்த குலமும்,எந்த காேத்தரமும்,எந்த குவலயமும் எனக்கு வேண்டாம்!! அரநெறியே அறநெறி!! அதுவே அருள் நெறி!! அந்நெறியில் தவழ்வது  எக்குலமாயினும் அக்குலத்திடையே அடியேன் பிறக்க அருளு கண்டாய்!!
........................................................

இவ்வாறு எனது துன்பந் தாெலையதான் அஞ்செழுத்து ஓதினேன்!! என் துன்பம் தாெலைக்குவான் எழுந்த திருவடியாே நான் சூழ்ந்த நிலைகளை காட்டி அதை அடைதற்கு சைவ குல நெறியில் நிற்கவும்,நிற்குமாறு  வேண்டவும் என்னை பணித்து தன்னை காட்டியது
 சுருங்க...
================================
தவமே புரிந்திலன் அவமே கழிக்கின்றேன்
சிவமே எனறுநான் கிடந்திலன் - நவமே
நுழைந்தாலும் அடைகின்ற ஞானமிலேன் நாணமிலேன்
அழைக்கின்ற வாறெனக்கு அருள்!! 5:49
=================================

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்