திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்" (Thiruvottiyur Aadhipureeswarar) ஒரு பிரம்ம விஷ்ணு மகேந்திர சிவனாகும். இந்தஆலயம் சென்னை மாநகரான திருவொற்றியூரில் உள்ளது. இந்த ஆலயம் சிவனுக்கு அழகிய மரம், அழகிய குழிப்புகள் மற்றும் தீர்ப்பை பொழிக்கும் அனைத்தும் அமைந்திருக்கும். இந்த ஆலயத்தில் மூன்று மூல தேவர்கள் சிவனை பிரகாசம் பெற்றுள்ளனர்: பரமேஸ்வரர், பெருமான்னார் மற்றும் சிவன்

திருவள்ளூர் மாவட்டத்தில்   உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

தொண்டை நாட்டு தலங்களில் 20 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 253 வது தலமாக திகழும்

வைகுண்டத்தில் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. ""நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்'' என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, ""அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும். அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, படைக்கும் தொழிலை தொடர்வாயாக'' என்றார் பெருமாள்.பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.

உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை "ஒத்தி' (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் "ஒத்தியூர்' எனப்பட்டது. காலப்போக்கில் "ஒற்றியூர்' என மாறியது.

வரிவிலக்கு: மாந்தாதான் என்ற மன்னனுக்கு அதிக வயதாகிவிட்டது. ஆனாலும் இறப்பு வரவில்லை. பாவம் செய்தாவது இறந்துபோவோம் என கருதினான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அநியாய வரி விதித்தான். இது சம்பந்தமான ஓலை சிற்றரசர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஓலையில் யாரும் அறியாமல், ""ஒற்றியூர் நீங்கலாக'' என திருத்தி எழுதினார் சிவன். இதன் பிறகு அந்த மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வரியை விலக்கினான். நீண்டகாலம் பூமியில் வாழ்ந்தான். எந்தச்சூழ்நிலையிலும் விரக்தி அடையக்கூடாது என்பதை இத்தலம் காட்டுகிறது.

திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கிவிடும். பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர்.

இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது. பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் 18 வகை நடனகாட்சி நடக்கின்றதாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்

நால்வரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருவொற்றியூர்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக  அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் வடிவுடையாம்பிகை (வட்டப்பறையம்மன்)
அம்பாள் உடனுறை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் (ஒற்றீஸ்வரர்)
சுவாமி ஆலயம்

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்