பார்வதீஸ்வரர் ஆலயம் - இஞ்சிகுடி
பார்வதீஸ்வரர் ஆலயம்
அம்பாளுக்கு சிவபெருமான் தன் இடப்பாகத்தை தந்தருளிய ஸ்தலம். பார்வதிக்கு ஈஸ்வரர் இடப்பாகத்தில் இடம் அளித்ததால் பார்வதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ தொலைவில் இஞ்சிகுடி என்னும் என்னும் கிராமத்தில் அமர்ந்துள்ளது இத்திருக்கோவில்.
இறைவன் பார்வதீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதனை அடுத்து தனி சன்னதியில் இத்தலத்தின் தாயார் சாந்தநாயகி என்று அழைக்கப்படும் இறைவி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தலவரலாறு
சந்தனக் காட்டில் தவத்தில் இருந்த துர்வாசமுனிவரின் தவத்தை அரக்கியான மதலோலை கலைத்து அவரின் முன்பு காம விகாரத்தில் நின்றாள்.அவள் மீது பட்ட துர்வாச முனிவர் பார்வையால் அம்பரன், அம்பன் என்று இரு பிள்ளைகளை பெற்றாள்.
இவ்விரு பிள்ளைகளால் தேவர்களுக்கு ஏற்பட்ட தொல்லை நீங்க எல்லோரும் எம்பெருமானை வேண்ட அவர் தன் இடப்புறத்தில் இருந்த பார்வதியை நோக்க அதை புரிந்து கொண்ட அவர் இளம்பெண்ணாக உருவெடுத்து அவ்விரு அரக்கர்கள் முன்பு சென்றார்.
அவ்விருவரும் அவர் அழகில் மயங்கி அவரை மணமுடிக்கும் ஆவல் பெற அங்கு முதியவர் வடிவில் தோன்றிய பெருமால் இருவரில் ஒருவர்தான் மணமுடிக்க இயலும் எனவே உங்கள் இருவரில் யார் பலசாலி என்பதை நீங்கள் இருவரும் மோதி முடிவெடுங்கள் என அவர்களை தூண்டிவிட்டார்.
இருவருக்குமான போரில் அம்பரன் தன் தம்பி அம்மனை கொன்று அம்பிகையை நெருங்க, அம்பிகை காளியாக உருமாறி அம்பரனை சூலாயுதத்தால் வதம் செய்தார்.
வதம் செய்த பின்பும் ஆத்திரம் அடங்காத காளி, திருமாலின் வேண்டுகோள் படி சாந்தி அடைந்து மீண்டும் எம்பெருமான் இடப்பாகத்தில் எழுந்தருள எண்ணினார்.
அதற்காக ஒரு சந்தனமரத்தின் சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டி கங்கை தீர்த்தம் அங்கு சுரக்க அருளினார்.
அவரின் வேண்டுதல்படி இறைவன் இடப்பாகத்தை அளித்து அருளி பார்வதீஸ்வரர் ஆனார்
சாந்தமடைந்த நாயகியோ சாந்தநாயகி என்று பெயர் பெற்று இங்கு மக்களுக்கு அருளுகிறார்.
அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் இங்குதான் காட்சி கொடுத்தாக கூறுகின்றனர்
மேலும் கண்ணப்ப நாயனார் சிவனருள் பெற்ற ஸ்தலம் இதுவென்றும் கூறுகின்றனர்.
ஆலய நேரம்
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் 8 மணி வரை
நிறைவேறிய வேண்டுதல்கள்
சோழமன்னன் குலோத்துங்கன் இங்கு இருக்கும் அம்பாளை பிள்ளைவரம் வேண்டி மழலை செல்வம் பெற்றதால் அம்பாளுக்கு அணிவித்த கொலுசு இன்றும் அம்பாளின் காலில் கிடக்கிறது.
பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும் பிள்ளை வரம் வேண்டி யும் இங்கு வந்து வழிபடலாம்
Comments
Post a Comment