சந்தோஷமாக இருக்க
நான் மிகவும் பாக்கியவான் . . .
நான் மிகவும் சந்தோஷமாக
இருக்கிறேன்
நான் நல்ல செல்வத்தோடு
இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்
என்ன உள்ளது ?
இதன் ரகசியம் சொல்லவா . . . . .
என்னுடைய பணத்தேவைகளைக்
கவனித்துக்கொள்ள
குபேரனை நன்பராக ஏற்றுக்கொண்ட குபேர புரிஸ்வரர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
வைத்திஸ்வரன் கோவில் வைத்தியநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் மனதில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று சொல்ல
சீர்காழி பிரம்மபுரிஸ்வரர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு குறைவில்லாமல்
அழகழகான, அற்புதமான
வஸ்திரங்கள் எப்பொழுதும் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய
ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
அன்னபூரணியிடம் பிச்சை வாங்கிய விஸ்வேஸ்வரர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அம்மைஅப்பர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
ஶ்ரீசைலம் மஞ்சுநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் வாழ்க்கையை
சரியான பாதையில் நடத்த
திருமயிலை கபாலிஸ்வரர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை இரவில்
சுகமாக தூங்க வைக்க
இராமேஸ்வரம் இராமநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை காலையில்
அன்போடு அழகாக எழுப்ப
திருகைலாயநாதர் கௌரிசங்கர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
திருகேதார்நாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இன்னும் யாரெல்லாம்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
தெரியுமா ?
சொல்கிறேன் . . .
நீயும் தெரிந்து கொள் !
கொஞ்சம் பொறுத்திரு . . .
நீ இவர்களை எல்லாம்
உன்னோடு வைத்துக்கொண்டாயா ?
இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
அவர்களையும் சொல்கிறேன் கேள் !
நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
மதுரை மீனாட்சி சொக்கநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும்,என்னோடு விளையாடவும்
திருஆணைக்காவல் ஜலகண்டேஸ்வரர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
திருபுவனம் புவனநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
வைக்கவும் எப்பொழுதும்
ஆத்மநாத சுவாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு எல்லா புண்ணிய ஸ்தலங்கள்
தரிசிக்கவைப்பதற்கும்,
புண்ணிய நதிகளில் தீர்த்த யாத்திரை செய்வதற்கும்,பூமியில் வாழ எல்லா வளங்களையும்
தருவதற்கும்,
காசி விஸ்வநாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,என்னை சோதிக்கவும் திரு காளஹஸ்திஸ்வரர்
என்னோடு எனக்காக இருக்கிறார்் . . .
என்னோடு கடற்கரையில்
காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருச்சூழிநாதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல,என்னை உரிமையோடு
அடித்துத் திருத்த,
அண்ணாமலையார்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்காக தூது செல்ல,
எனக்காக வாதாட,
திருவாரூர் தியாகராஜ சுவாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இப்படியாக இன்னும் பலபேர்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !
அதனால் என் தேவைகளைப் பற்றி,
என் வாழ்க்கையைப் பற்றி,
என் எதிர்காலத்தைப் பற்றி,
என் மரணத்தைப் பற்றி,
என் குடும்பத்தைப் பற்றி,
என் கௌரவத்தைப் பற்றி
நான் யோசிப்பதேயில்லை . . .
ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .
எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
சிதம்பரம் ஆனந்த நடராஜர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இத்தனை பேர்
என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி
கவலைப்படவேண்டும் ?
நான் ஆனந்தத்தில்
நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .
நீயும் இவர்களை உன்னோடு
வைத்துக்கொள் !
உன் வாழ்க்கையும் நிச்சயம்
ஆனந்தமாகவே
இருக்கும் .
Comments
Post a Comment