திருச்செந்தூர் முருகப் பெருமானின் அற்புதங்கள்

💥திருச்செந்தூர் முருகப் பெருமானின் அற்புதங்கள்
திருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்.
                திருச்செந்தூர் முருகனை நாம் தரிசிக்க செல் லும் பொழுது இறங்கி தான் செல்ல வேண்டும் தரிசித்துவிட்டு வரும்பொழுது ஏறித்தான் வர வேண்டும் இது எதைக் குறிக்கிறது என்றால் நாம் கந்தனை தரிசிக்க எவ்வளவு இறங்கி சென்றாலும் தரிசித்த பின்பு நம் வாழ்க்கையி ல் என்றும் ஏற்றம்தான் இருக்கும் என்று உணர்த்துகிறது.
◆திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண் முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரம ணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். 
◆திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
◆திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவ ருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
◆மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படு கிற து. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
◆மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர் உண்டு. 
◆திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்பு ள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். 
◆திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களி ல் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். 
◆திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. 
◆திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 
◆திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. 
◆மூலவருக்கு பக்தர்கள் தங்க அங்கி அணிவி த்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
◆திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன. 
◆திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று சுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 
◆நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். 
◆திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர் அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது. 
◆தமிழகத்தில் முதன்முதலில் நாகரீகம் தோன் றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. 
◆முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்க ள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 
◆திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
◆இத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திரு ப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப் பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப் படுகின்றது. 
◆இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண் டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநா யகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெரு மானை வணங்கச் செல்ல வேண்டும். 
◆இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது. 
◆முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமா க மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள மாப் பாடு என்ற இடம் ஆகும். தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
◆திருச்செந்தூர் முற்காலத்தில் முருகன் தீம்பு னல் அடைவாய் என்று தொல்காப்பியத்திலும்
வெண்டலைப் புணரி யலைக் குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை என்று புறநானூற்றிலும், திருமணி விளக்கின லை வாய்ச்செரு மிகுசேஏய் என்று அகநானூ ற்றிலும், உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று திருமுருகாற்றுப்படையிலு ம், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேரல், செந்தி ல், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம் இன்றும் கூட அழைக்கப்பட்டது.
◆முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது.
◆முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை சம்ஹாரம் செய்வதுதான். திருச்செந்தூரில் தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும், அதுமட்டுமின்றி என்றும் நம க்கு ஞானத்தை அருளி தீயவைகளிடமிருந்து நம்மை காப்பாற்றுகிறார்.
◆முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
◆முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத் துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.
◆திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந் தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுரு கன் கோவில் என்று கருதுகிறார்கள்.
◆கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருக னை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
◆அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இட ங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.
◆திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திரும ண நாளில் மட்டுமே அந்தவாசல் திறக்கப்படும்
◆திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
◆குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமா னவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.
◆முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
◆சண்முகருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதி யில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமிய ரும் நயினார் எனும் பெயர் சூட்டியுள்ளனர்.
◆வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
◆மூலவர் தவ கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதி ல்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்க ளில் காரம், புளி உண்டு.
◆முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொ ருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்ச ம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகிய ன இடம் பெறுகின்றன. 
◆உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்கு வார்கள்.
◆இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகிய ன நிவேதனம் செய்வர்.
◆சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
சித்திரை, ஐப்பசி, தை - 3
ஆடி, தை அமாவாசை - 2
ஆவணி, மாசித் திருவிழா - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் - 2
மாத விசாகம் - 12
ஆனி தை வருடாபிஷேகம் - 3
தீபாவளி, மகாசிவராத்திரி - 4
மொத்தம் 36
◆திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.
◆இத்தலத்தில் கோவில் வெளிபிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டு ள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.
◆திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்த தும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோ ருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.
◆சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்து வகையில் இன்றும் மூலவர் சிலை யின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட் கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.
◆திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இர ண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்ற ன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கன வே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒருபகுதி மயிலா கவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.
◆ஆவணி,மாசி திருவிழாவின்போது முருகப் பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
◆திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால் அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.
◆மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.
◆கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1897-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பி ரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.
◆திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங் கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.
◆சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.
◆திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதி யைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையி ல் தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
◆கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.
◆மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும்கொண்டருள்பவன் திருமுருகன்.
◆சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருப வன் திருமுருகன்.
◆யோகம், போகம், வேகம் என மூவகை வடிவ ங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.
◆வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே 
செந்தி ல் நகர் சேவகா என்று திருநீர்
அணிவார்க்கு மேவ வராதே வினை.
(நக்கீரர் பாடிய திருச்செந்தூர் விபூதியை பற்றிய வெண்பா).
◆திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்த ருளி உள்ளார்.
கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...


💥தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
💥சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது.
💥சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.
💥திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
💥ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன் புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.
💥விசாகப் பெருவிழா பத்து நாள் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழி போல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர்.
விழாவின் முதல் நாள் உச்சிகால பூஜை முடிந்ததும் முருகப் பெருமான் மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். இங்கு ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து முருகன் கோயிலுக்குள் போவார்.
💥137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார்.
💥தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார்.
சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது. பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் அடிக்கடி வழுக்கி விழுந்த சம்பவங்களாலும் கிழக்கு முகமாக சுப்பிரமணியர் சந்நிதிக்கு பின்புறம் அமைந்து விட்டதாலும் ராஜ கோபுர வாயில் மூடப்பட்டு விட்டதாம்.
💥ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகாமண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது

🌺நீங்கள் முருக பக்தரா? அடுத்த முறை திருச்செந்தூர் செல்லும்போது இதை எல்லாம் மறக்காமல் கவனியுங்கள்..🌺
🌺உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குருபலன் சரியாக இல்லையென்றால் அவர்களுக்கு திருமண தடை, குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம் இன்மை போன்ற பல தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறான தடைகள் நீங்கி, குரு பலன் கிடைக்க திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறான சிறப்பு மிக்க திருச்செந்தூர் கோவிலின் முக்கிய குறிப்புகள் பற்றி தான் இப்பகுதியில் அறிந்து கொள்ளப் போகிறோம்.
🌺அறுபடைவீடுகளில் திருச்செந்தூரை தவிர மற்ற 5 கோவில்களும் குன்றுகளின் மேல் அமைந்துள்ளன என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் திருச்செந்தூர் கோவிலும் ஒரு சிறிய குன்றின் மீது தான் அமைந்துள்ளது. இதற்கு உதாரணமாக அங்குள்ள வள்ளி குகையினை ஒட்டி மணல் மேடுகள் இருப்பதைக் காண முடியும். இந்த மணல் குன்றுகளின் மீது தான் திருச்செந்தூர் கோவில் அமைந்துள்ளது.
🌺திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முருகரை மட்டுமே தரிசித்து வந்திருப்பார்கள். ஆனால் முருகனது கருவறைக்குப் பின்னால் முருகப்பெருமானே வழிபட்ட பஞ்சலிங்க சன்னதி உள்ளது. பஞ்சலிங்க சன்னதிக்கு சென்று பஞ்சலிங்கங்களை தொழுது விட்டு வந்தால் முருகப்பெருமானின் திருவருள் நிறைவாகக் கிடைக்கும்.
🌺பொதுவாகவே கடற்கரைக்கு அருகில் இருக்கும் கட்டிடங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமாகவே கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருச்செந்தூர் முருகர் கோவிலின் கருவறை கடல் மட்டத்தில் இருந்து 10 அடி தாழ்வாகவே அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கடற்பரப்பில் இருந்து 220 அடிகளுக்கு அருகாமையிலேயே இந்த கோவில் உள்ளது. எவ்வளவு பெரிய இயற்கை சீற்றங்கள் வந்த பொழுதும் இதுவரை எந்த ஒரு இயற்கை சீற்றமும் இந்த கோவிலை பாதித்ததில்லை. இதுவே முருகப்பெருமானின் மகிமையாகும்.
🌺முருகப்பெருமானின் கோவிலுக்கு அருகில் இருக்கும் நாழிக்கிணறு எப்பொழுதும் வற்றாமல் நீர் சுரந்து கொண்டே இருக்கும் அதிசயமான ஒரு இடமாகும். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இந்த கிணற்றில் மட்டும் குடிக்கும் அளவிற்கு நல்ல நீர் சுரப்பது அதிசயத்திலும் அதிசயம். முருகப்பெருமான் அவருடைய படை வீரர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அம்பு எய்தி, ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அதுவே இந்த நாழிக்கிணறாகும்.
🌺திருச்செந்தூர் கோவிலை கட்டும் பொழுது அதற்கு பெரிதளவில் துணைபுரிந்த மூன்று அடியார்களின் சமாதி, முருகன் கோவிலுக்கு சிறிது தூரத்தில் உள்ளது. இந்த மூன்று அடியார்களின் சமாதியும் மூவர் சமாதி என்று அழைக்கப்படுகிறது. இவர்களை சென்று தொழுது வருவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
.🌺திருச்செந்தூர் முருகனின் மற்றுமொரு பெருமை என்னவென்றால் டச்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்த பொழுது முருகர் சிலையை கடத்தி அவர்களது நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்பொழுது கடலுக்கு நடுவே செல்லும் பொழுது அவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு சூறாவளி அடிக்க தொடங்கியது. அப்பொழுது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, முருகர் சிலையை கடலில் போட்ட பின்னரே சூறாவளி நின்றது. சில காலங்கள் கழித்து ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், தான் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி வெளியே எடுக்க சொன்னார். அப்படி கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையும் திருச்செந்தூர் கோவிலினுள்ளே தான் இருக்கிறது.
.🌺இவ்வாறு பல சிறப்பம்சங்கள் நிறைந்த திருச்செந்தூர் முருகனை மீண்டும் ஒருமுறை சந்திக்கச் சென்றால், இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, தவறாமல் தொழுது விட்டு வாருங்கள்

திருப்பம் தரும் திருச்செந்தூர் ஜெயந்தி நாதர்!
 தமிழ்நாட்டில் எங்கு ஒரு சிறிய மலைக்குன்று இருந்தாலும் அதன்மேல் ஒரு முருகன் கோயில் இருக்கும். அதனால்தான் முருகப்பெருமானை (மலையும் மலை சார்ந்த இடங்களில் இருப்பதால்) குறிஞ்சியாண்டவர் என்று சொல்கிறோம்,

எப்பொழுதும் மலை மீதே இருக்கும் முருகப்பெருமான் கடற்கரையோரமாக இருக்கும் தலம் திருச்செந்தூர். முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகக் கருதப்படும் இத்திருத்தலம் தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 88 கிமீ தொலைவிலும் உள்ளது.

முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்த பின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவமைத்து வழிப்பட்ட திருத்தலம் திருச்செந்தூராகும்.

சூரபத்மன் என்ற அசுரன் வீரமகேந்திரபுரி என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான். அவன் சிவப்பெருமானை நோக்கி தவமிருந்து வரம் பல பெற்றிருந்ததால் மிகவும் கர்வத்துடன் தன்னை அழிக்க யாருமில்லை என்ற அகந்தையுடன் தேவர்களையும் அடக்கி கொடுமை செய்து வந்தான். இவனிடமிருந்து விடுதலை வேண்டிய தேவர்கள் சிவப்பெருமானிடம் முறையிட அவர் தன் மூன்றாம் கண்ணாகிய நெற்றிக் கண்ணை திறந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். அத்தீப்பொறிகளை அக்னி பகவான் மூலம் பெற்ற கங்கை இமயமலையில் இருக்கும் சரவணப்பொய்கையில் சேர்ப்பித்தது. அங்கே அந்த ஆறுப்பொறிகளும் ஆறுக் குழந்தைகளாக உருமாறின.

ஒரு சமயம் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு வந்த இந்த ஆறுக் குழந்தைகளைக் காண பார்வதி தேவி வந்தார். அவர் அன்புடன் அந்த குழந்தைகளை அரவணைக்க ஆறுக் குழந்தைகளும் ஒன்றாக இணைந்து ஆறுதலை, பன்னிரெண்டு கைகளும் கொண்டு முருகப்பெருமானாக உருவெடுத்தன. முருகன் வாலிபப் பருவம் எட்டியதும் சிவப்பெருமானின் கட்டளைக்கிணங்க சூரப்பத்மனை வதம் செய்வதற்காக பெரும்படையுடன் திருச்செந்தூர் வந்து முற்றுகையிட்டார். தன் படைத்தளபதி வீரபாகுவை சூரப்பத்மனிடம் அனுப்பி தேவர்களை விடுவிக்குமாறு கூறினார். அவன் இதற்கு மறுக்கவே போர் மூண்டது.

கடுமையாக நடந்த போரின் முதல் ஐந்து நாட்களில், சூரபத்மனின் சகோதரர்களும், சேனையையும் அழித்தார். ஆறாம் நாள், சூரபத்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் போர் நடந்தது. மாமரத்தின் உருவில் ஒளிந்திருந்த சூரபத்மனை முருகப்பெருமான் தன் வேலால் இரண்டாகப் பிளந்தார். உடைந்த துண்டுகளில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் உருமாறின. முருகப்பெருமான் மயிலினை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றார். அதைக் குறிக்கும் வகையில் கர்ப்பகிருகத்தின் முன் இரண்டு மயில்கள் உள்ளதை இப்பொழுதும் காணலாம். சூரப்பத்மனை வதம் (சூரசம்ஹாரம்) செய்த பின், முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானை வழிபட, ஐந்து லிங்கங்கள் அமைத்து வழிப்பட்டார். அந்த லிங்கங்கள் கர்ப்பகிரகத்தின் பின்புறம் பாம்பறை எனும் குகையில் அமைந்துள்ளன. முருகப்பெருமான் அவற்றை வழிப்பட்டுக்கொண்டிருப்பதால் கையில் மலர்களுடன் இருக்கும்விதமாக மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பஞ்சலிங்கங்கள் இருப்பதால்தான் மூலவர் சன்னிதானத்திற்கு முன்பாக இரண்டு மயில்களுடன் நந்தியும் காணப்படுகிறது.

கோயில் அமைப்பு:

குறிஞ்சி ஆண்டவனான முருகப்பெருமான் எப்படி கடற்கரையில் இருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கலாம். உண்மையில் திருச்செந்தூரிலும் கடற்கரையோரமாக இருக்கும் சந்தனமலையில்தான் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். காலப்போக்கில் இங்கேயுள்ள சந்தன மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கந்தபுராணம், இவ்விடத்தை 'கந்தமானத பர்வதம்' என்று சிறப்பிக்கிறது. குறிஞ்சி மற்றும் முல்லையின் கலப்பு என இவ்விடம் பற்றி அகநானூறும் குறிப்பிடுகிறது, இதை உணர பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள இடத்தை உற்று நோக்கினால் அது ஒரு மலை என்பது நன்குப் புலப்படும்.

இக்கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகள் கொண்டது. உயரம் 137 அடி உயரமும் 90 அடி அகலமும் கொண்டதாகும். தென்வடலாக அமைந்த இக்கோபுரத்தின் அகலம் 65 அடிகளாகும். இக்கோபுரத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் ராஜகோபுரம் பொதுவாக கிழக்குவாயிலிலேயே அமைக்கப்படும். ஆனால் திருச்செந்தூரில் கிழக்கு வாயில் கடலுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கே உறுதியான அடித்தளம் இடமுடியாதென்பதாலும் கடல் அரிப்பு ஏற்படும் என்பதாலும் ராஜகோபுரம் மேற்கு வாயிலில் கட்டப்பட்டுள்ளது.

சண்முக விலாசம்:

தெற்கு நோக்கியவாறு உள்ள வாயில் வழியாக உள்ளேச் சென்றதும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சண்முக விலாசம் என்னும் பெரிய மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபம் 120 அடி உயரமும், 86 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்கி நிற்கின்றன.

இரண்டாவது பிரகாரம்:

முருகப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருந்தாலும் திருச்செந்தூர் தலம் குருபகவானுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதற்கு காரணம் முருகப்பெருமான் அசுரர்களுடன் போர் துவங்குவதற்கு முன்பு, சூரபத்மன் பற்றியும், அவன் சகோதரர்கள் மற்றும் அசுரகுலம் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்பினார். முருகனின் விருப்பத்தை உணர்ந்த குருபகவான், திருச்செந்தூருக்கு வந்து அசுரர்கள் பற்றிய தகவல்களை முருகனுக்கு விளக்கிக் கூறியதோடு இத்தலத்திலேயே தங்கியும் விட்டார். குருபகவான் எழுந்தருளிய திருத்தலம் என்பதால் இதனை குரு பரிகார திருத்தலமாகவும் வழிபடுகிறார்கள். குரு பரிகாரத்திற்கும் குருப் பெயர்ச்சிக்கும் பெயர் பெற்ற இத்திருத்தலத்தின் இரண்டாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.

அடுத்ததாக இத்தலத்தின் இன்னொரு விசேஷமும் இரண்டாம் பிரகாரத்திலேயே அமைந்துள்ளது. நாம் திருச்செந்தூர் செல்லும்போது அதையும் கவனிக்க தவறக்கூடாது. அதாவது சூரபத்மனை முருகன் வதம் செய்த இடம் திருச்செந்தூர். ஆனால் மூலவரோ வதம் முடிந்த பின்பு லிங்கம் அமைத்து பூஜை செய்யும் தோற்றத்தில் சாந்தமாக காட்சியளிக்கிறார். (பொதுவாகவே 'அழகென்ற சொல்லுக்கு முருகா' என்பதற்கு ஏற்ப அழகாகவும் சாந்தமாகவுமே நாம் பார்த்திருக்கிறோம்). ஆனால் இத்தலத்தில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 'சூரசம்ஹார மூர்த்தி' அழகுடன் ஆவேசமும் வீரமும் ஒருங்கிணைந்துக் காணப்படுகிறார். இக்காட்சியை நாம் வேறெங்கும் காணமுடியாது.

மேலும் இரண்டாம் பிரகாரத்தில் மேலை கோபுரம் கட்ட உறுதுணையாக இருந்த மேலவாசல் விநாயகர் சன்னதி, பெருமாள் சன்னதியும் உள்ளது.

முதற்பிரகாரம்:

இங்கே மாப்பிள்ளைச்சாமி என அழைக்கப்படும் உற்சவமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.மேலும் வள்ளி தெய்வயானை சன்னதிகளும் யாகசாலையும் உள்ளது. நடராஜர் சன்னதியில் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்க அருகே சிவகாமியம்மையும் நடனத்தை மெய்மறந்து பார்த்தவண்ணம் இருக்கும் காரைக்காலம்மையாரையும் காணலாம்.

மூலவர்:

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் கருவறையில், கிழக்கு நோக்கியவாறு மூலவர் செந்தில்நாதன் எழுந்தருளியுள்ளார். தலையில் சடையை எடுத்துக் கட்டியுள்ளார். நான்கு கரங்களுடன் திகழும் இவர், மேற்கரங்களில் வஜ்ரம், ஜப மாலையும், கீழ்க்கரங்களில் தாமரையும், ஊரு முத்திரையும் தாங்கியுள்ளார். மூலவருக்கு முன்பாக வலப்புறத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும், இடப்புறம் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும் உள்ளனர்.

கர்ப்பகிருகத்திற்கு பின்புறம் அமைந்திருக்கும் பஞ்சலிங்கமூர்த்திகளை பூஜிக்கும் கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.

நாழிக்கிணறு:

தனது படைவீரர்களுக்கு தாகம் எடுத்தப்போது தனது வேலை ஊன்றி முருகப்பெருமான் உருவாக்கிய தீர்த்தம்தான் நாழிக்கிணறு. 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில் இருக்கும் நாழிக் கிணற்றில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. உப்புகரிக்கும் கடற்கரையின் அருகில் இருக்கும் இக்கிணற்றின் நீர் தூய்மையாக இருப்பது ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் முருகனை தரிசிக்கும் முன்பு கடலிலும் நாழிக்கிணற்றிலும் நீராடுவதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.

'ஓம்' வடிவம்: திருச்செந்தூர் உட்பிரகாரத்தை முறைப்படி சுற்றி வந்தால் அது 'ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

பூஜைகள் மற்றும் உற்சவங்கள்:இத்திருக்கோயிலில் குமார தந்திர முறைப்படி, ஒன்பது கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9.00 மணி வரை தொடர்ந்து திறந்தே இருக்கும். ஒவ்வொரு மாத விசாகம், கார்த்திகை சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைப்பெறுகிறது.

வைகாசி விசாகத்தன்று ஸ்ரீஜெயந்திநாதர், வள்ளி, தெய்வயானையுடன் திருவீதியுலா நடைப்பெறும்.

கந்தசஷ்டி விழா:

சூரபத்மனை வதம் செய்த இடம் என்பதால் இங்கே கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முக்கிய வைபவமாகும். இதைக் காண வரும் மக்கள் அலை, கடலலையோடுப் போட்டிப் போடும். 7ம் நாள் தெய்வயானை அம்மனுடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைப்பெறும்.

ஆவணி மற்றும் மாசி திருவிழா:

* 7ஆம் திருவிழா பச்சை சாத்தி
* 8ஆம் திருவிழா சிகப்பு சாத்தி
* 10ஆம் திருவிழா திருத்தேர் ( ஆண்டில் இருமுறை இத்தேர் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்).
* 11ஆம் திருவிழா தெப்பத் திருவிழா (ஆண்டுக்கு ஒரு முறை இத்திருவிழா நடைபெறுகிறது) (மாசி மாதம் மட்டும்)

எங்கே இருக்கிறது? எப்படி செல்வது?: தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 88 கிமீ தொலைவிலும் உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களிலிலிருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளது. மேலும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள் திருச்செந்தூருக்கு அருகிலிருக்கும் விமானத் தளங்களாகும்.

திருச்செந்தூரில் ஏராளமான இலவச தங்கும் விடுதிகள் உள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைய விடுதிகளும் குடில்களும் உள்ளது..

திருச்செந்தூர் சென்றால் அதன் சுற்றுப்புறத்தில் பல கோயில்கள் உள்ளது. சிவக்கொழுந்தீஸ்வர திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதி, குலசை முத்தாரம்மன் ஆலயம் என பல பெயர்பெற்ற கோயில்கள் உள்ளன.

பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் பேச்சாற்றல் பெற்ற இத்திருத்தலத்தில் மூலவர் சன்னதியில் சந்தனமும் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட பன்னீர் இலையில் விபூதியும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இதை உண்ட, ஆதிசங்கரர் நோய் நீங்கி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் பாடியதாகக் கூறுவர். இதுப் போல பல மகிமைகளைக் கொண்ட திருச்செந்தூர் தலத்திற்கு நாமும் ஒருமுறை சென்று நலம் பெறலாமே!

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்