முருகனுக்கு ஏன் காவடி எடுக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொரு தெய்வங்களையும் ஒவ்வொரு விதமாகவே வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். நம் முன்னோர்கள் எந்த வழிமுறைகளை பின்பற்றினார்களோ அதே வழிமுறைகளைத் தான் நாமும் பின்பற்றி நடக்கிறோம். முருகனுக்கு காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், மாலை அணிந்து பாத யாத்திரை செல்லுதல், விரதம் கடைபிடித்தல், மொட்டை போடுதல் என்று பலவற்றை கடைபிடித்து வருகிறோம். ஆனால், எதற்காக காவடி எடுக்கிறோம் என்று தெரியுமா?.... அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் இடும்பன். அகத்திய முனிவரோ, தனது வழிபாட்டிற்காக கயிலைமலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் கொண்டு வரும்படி இடும்பனிடம் கூறினார். இந்த இரு மலைகளையும் திருவாவின்ன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி முருகன் திருவிளையாடலை நிகழ்த்தினார். அதற்காக, இடும்பனுக்கு வழி தெரியாமல் போகச் செய்தார். அதோடு, தான் குதிரை மீது செல்லும் அரசனைப் போன்று தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று நேரம் ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறினார். இடும்பனும் அவ்வாறே காவடியை இறக்கி வைத்து ஓய்வு...