திருவாதவூர் - அருள்மிகு திருமறை நாதர் சுவாமி வேதநாயகி அம்மன் திருக்கோவில்
திருவாதவூர் - அருள்மிகு திருமறை நாதர் சுவாமி வேதநாயகி அம்மன் திருக்கோவில்
மதுரை மாவடத்தில் அமைந்துள்ள திருவாதவூர் மிக மிக அமைதியாக உள்ள ஒரு மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள ஊர். இந்த ஊரின் நடுநாயமாக இருக்கும் அற்புதமான சிவன் கோவிலும் அதன் அழகும் பார்க்கவே மிக அற்புதமாக் இருக்கிறது.
பல வரலாறுகளை கொண்ட இந்த ஊரில் தான் "நமசிவாய வாழ்க" பாடலை நமக்கு அளித்த மாணிக்க வாசகர் பிறந்திருக்கிறார் அவர் பிறந்த இடத்தில அவருக்கென ஒரு சிறிய கோவிலும் உள்ளது .
![]() |
tiruvathavur sivan temple |
![]() |
அம்மா சந்நிதி |
எம்பெருமானின் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப்புறம் சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறார். வலது புறம் மகாலட்சுமி வீற்றிருக்கிறார்.
வாத நோயை தீர்த்து வைக்கும் அற்புத தளமாக இது விளங்குகிறது. சனி பகவானின் வாத நோயை இது தீர்த்த தலமாக இது விளங்குகிறது. மாண்டல்ய முனிவரின் சாபத்தால் வாத நோய்க்கு ஆளான சனி பகவான் இங்கு வந்து சிவபெருமானை தொழுது வாத நோய் நீங்க பெற்றார்.
![]() |
மூலவரின் வெளிபிரகாரம் |
இங்கு நவகிரகங்களில் சனி பகவான் இருந்தாலும் சனி பகவான் இங்கு வந்து வழிபாட்டு நோய் நீங்க பெற்ற காரணத்தினால் சனி பகவான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிரறார்
எல்லாவற்றிற்கும் மேலாக நாயன்மார்களில் முக்கியமானவரும் நால்வரில் ஒருவருமான மாணிக்க வாசகருக்கு சிவபெருமான் சிலம்பொலியை கேட்பித்து அருள் பாலித்து உள்ளார் .
![]() |
patha silamboli kattiya idam |
மேலே படத்தில் உள்ள இந்த இடத்தில தான் பாத சிலம்பொலி மணிக்க வாசகருக்கு காட்டிய இடம் .
Comments
Post a Comment