ஆலயம் சென்று தொழ மிகச் சிறந்த நாள் இன்று
ஆன்மிக நண்பர்களே இன்றைய நாள் மிகவும் அருமையான நாள். இன்று பல்வேறு தெய்வங்களுக்கு உகந்த நாள். இந்த பதிவுகளை உடனுக்குடன் உங்கள் இமெயில் பெற subscribe செய்யுங்கள். அல்லது கமெண்டில் உங்கள் மெயில் id பதிவு செய்யுங்கள்.
சரி இந்த நாளின் முக்கியத்துவத்தை காண்போம்.
இந்த மாதம் புரட்டாசி மாதம் இந்த மாதம் முழுவதுமே பெருமாளை தொழுவதற்கான மாதம் ஆகும். இந்த நாள் சோமவாரம் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை .
இந்த நாளின் நட்சத்திரம் கார்த்திகை முருகப்பெருமானை வழிபட மிக உகந்த நாளான இன்று தம்பியோடு இணைந்து ஆசி வழங்க வரும் அண்ணனாம் விநாயகப் பெருமானை வணங்க கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளாகும்
மேலும் இன்று வள்ளலாரின் பிறந்த நாளாகும்.
இப்படி அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக வரும் இந்நாளில் அனைவரும் குடும்பத்துடன் ஆலயம் சென்று வழிபடுங்கள்
Comments
Post a Comment