அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோவில் , தேனீ மாவட்டம் , முருகன் திருத்தலம்
சுருளிவேலப்பர், தேனீ மாவட்டம் , முருகன் திருத்தலம்
தேனீ மாவட்டத்தில் கம்பம் அருகில் உள்ள முருகன் திருக்கோவில் சுருளி வேலப்பர். தேனீ மாவட்டத்தில் சுருளி மலை மீது குகைக்கோவிலில் முருகப்பெருமான் சுருளி வேலப்பர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார்.
மலையரசனான நம்பிராஜன், முருகபெருமான் வள்ளியை மணந்து கொண்டபோது சீராக தனது ஆட்சிக்கு உட்பட்ட மலைப்பிரதேசங்களை கொடுத்தார்.அதில் ஒன்றான இம்மலையில் முருகபெருமான் குடி கொண்டார்.
ஒரு சமயம் சனி பகவான், தன் சஞ்சாரபடி தேவர்களை பிடிக்க வேண்டி இருந்த போது தேவர்கள் இங்கு வந்து முருகபெருமானை காத்தருள வேண்டி இங்கு வந்து வேண்டவே முருகபெருமான் அவர்களுக்கு அடைக்கலம் நல்கினார்.
இந்த மலையில் உள்ள ஒரு தீர்த்தம் சுருதியுடன் கொட்டும். இந்த சுருதி பின்னாளில் மருவி சுருளி ஆகி இங்கு இருக்கும் முருகபெருமான் சுருளி வேலப்பர் என அழைக்கபாடலானார் .
சுருளி வேலப்பர், வினயாகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராமர மற்றும் லட்சுமணன் இங்கு எழுந்து அருளி உள்ளனர்.வேலப்பர் குகையில் சிவன், விஷ்ணு,வினயகர் கட்சி அளிக்கின்றனர்.
இங்கு கைலாச குகை, விபுதி குகை சர்ப்ப குகை கிருஷ்ணன் குகை கன்னிமார் குகை என பல குகைகள் உள்ளன.
அகத்தியருக்கு சிவன் மணக் கோலத்தில் கட்சி தந்தது இந்த குகையில்தான் என்று கூறுகிறார்கள்.
முருகர் குடி கொண்டதால் இதை நெடுவேல் குன்றம் என்றும் கூறுகிறார்கள்.
ஆலய நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
Comments
Post a Comment