திருச்செந்தூர் என எழுதும் போதே அந்த நீண்ட கடலும் அதன் முன்னே உயரமாக நிற்கும் அந்த கோபுரமும் கண்முன்னே வருகிறது. மேலும் முருகப்பெருமானின் பெருமையை விளக்கும் படியாக பல்வேறு அதிசயங்கள் நிகழ்நத தலம் திருச்செந்தூர்.
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.
திருச்செந்தூர் கடலில் குளித்து விட்டு கடற்கரையோரம் உள்ள நாழி கிணற்றில் குளித்தாள் தீராத நோயும் தீரும் என்கிறார்கள்.சூரபத்மனை எதிர்த்து போரிட தன்னோடு வந்த படைவீரர்களின் தாகம் தணிக்க முருகபெருமான் இந்த கிணற்றை தோற்றுவித்தாக கூறுகிறார்கள்.
இங்கு வழங்கும் பன்னீர் இலை விபுதி சக்தி மிக்கது. சூரபத்மனை வதம் செய்த பின்பு தன்னை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்பிரமணிய சுவாமி தன் பன்னிரு கையாலே விபுதி பிரசாதம் வழங்கினாராம் அதனால் இப்படி செய்கிறார்கள்.
திருச்செந்தூர் சென்று திரும்பிய பலர் தங்களுடைய பிரச்சனைகள் தீர்வதை கண்டு மீண்டும் அந்த அழகு முருகனை கண்டு தரிசிக்க குடும்பம் குடும்பமாக செல்கின்றனர்
அலைகடலையும் சந்தன மலையையும் அங்கே இருந்து அருள்பாலிக்கும் முருகனையும், சண்முகனையும் புகழ்ந்து அருணகிரிநாதர் திருப்புகழில் பல பாடல்களை திருச்செந்தூர் தலத்திற்கென பாடியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவர் எனும் பேருடன்அமைந்துள்ள இந்த தலத்தின் அழகை காண கண்கோடி வேண்டும்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சூரபத்மனை அழிக்க சிவபெருமானின் நெற்றியில் இருந்து தோன்றிய ஆறு பொறிகள் இணைந்து உருவான முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இங்கு வந்த முருகனை தரிசிக்க குருபகவான் இங்கு வந்த சிறப்பு பெற்ற தலம்.
இங்கே தங்கி சூரபத்மனை எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட முருகர் ஜெயந்தி நாதர் என் அழைக்ப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயர் மருவி செந்தில் நாதர் என் அழைக்கப்பட்டார். ஜெயந்தி புரம் அழைக்கப்பட்ட ஊரும் திருச்செந்தூர் ஆனது.
இன்றும் இங்கு நடக்கும் சஷ்டி திருவிழாவை காணவும் இங்கே தங்கி சஷ்டி விரதம் அனுசரிக்கவும் பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் வருகிறது.
Comments
Post a Comment