Posts
Showing posts from 2020
அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோவில் , தேனீ மாவட்டம் , முருகன் திருத்தலம்
- Get link
- X
- Other Apps
சுருளிவேலப்பர், தேனீ மாவட்டம் , முருகன் திருத்தலம் தேனீ மாவட்டத்தில் கம்பம் அருகில் உள்ள முருகன் திருக்கோவில் சுருளி வேலப்பர். தேனீ மாவட்டத்தில் சுருளி மலை மீது குகைக்கோவிலில் முருகப்பெருமான் சுருளி வேலப்பர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார். மலையரசனான நம்பிராஜன், முருகபெருமான் வள்ளியை மணந்து கொண்டபோது சீராக தனது ஆட்சிக்கு உட்பட்ட மலைப்பிரதேசங்களை கொடுத்தார்.அதில் ஒன்றான இம்மலையில் முருகபெருமான் குடி கொண்டார். ஒரு சமயம் சனி பகவான், தன் சஞ்சாரபடி தேவர்களை பிடிக்க வேண்டி இருந்த போது தேவர்கள் இங்கு வந்து முருகபெருமானை காத்தருள வேண்டி இங்கு வந்து வேண்டவே முருகபெருமான் அவர்களுக்கு அடைக்கலம் நல்கினார். இந்த மலையில் உள்ள ஒரு தீர்த்தம் சுருதியுடன் கொட்டும். இந்த சுருதி பின்னாளில் மருவி சுருளி ஆகி இங்கு இருக்கும் முருகபெருமான் சுருளி வேலப்பர் என அழைக்கபாடலானார் . சுருளி வேலப்பர், வினயாகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராமர மற்றும் லட்சுமணன் இங்கு எழுந்து அருளி உள்ளனர்.வேலப்பர் குகையில் சிவன், விஷ்ணு,வினயகர் கட்சி அளிக்கின்றனர். இங்கு கைல...
திருவாதவூர் - அருள்மிகு திருமறை நாதர் சுவாமி வேதநாயகி அம்மன் திருக்கோவில்
- Get link
- X
- Other Apps

திருவாதவூர் - அருள்மிகு திருமறை நாதர் சுவாமி வேதநாயகி அம்மன் திருக்கோவில் மதுரை மாவடத்தில் அமைந்துள்ள திருவாதவூர் மிக மிக அமைதியாக உள்ள ஒரு மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள ஊர். இந்த ஊரின் நடுநாயமாக இருக்கும் அற்புதமான சிவன் கோவிலும் அதன் அழகும் பார்க்கவே மிக அற்புதமாக் இருக்கிறது. பல வரலாறுகளை கொண்ட இந்த ஊரில் தான் "நமசிவாய வாழ்க" பாடலை நமக்கு அளித்த மாணிக்க வாசகர் பிறந்திருக்கிறார் அவர் பிறந்த இடத்தில அவருக்கென ஒரு சிறிய கோவிலும் உள்ளது . tiruvathavur sivan temple இந்த கோவிலின் மூலவர் மாணிக்கவாசகருக்கு அருள் பாலித்த சிவபெருமான், திருமறை நாதர் சுவாமி எனும் பெயரோடு அழகாக காட்சி தருகிறார். வேதநாயகி அம்மன் எனும் பெயரோடு அம்மா கோவிலின் இடப்புறம் தனி சந்நிதியில் எழுந்து அருளியிருக்கிறார். அம்மா சந்நிதி எம்பெருமானின் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப்புறம் சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறார். வலது புறம் மகாலட்சுமி வீற்றிருக்கிறார். வாத நோயை தீர்த்து வைக்கும் அற்புத தளமாக இது விளங்குகிறது. சனி பகவானின் வாத நோயை இது தீர்த்த தலமாக இது விளங...
ஆலயம் சென்று தொழ மிகச் சிறந்த நாள் இன்று
- Get link
- X
- Other Apps
ஆன்மிக நண்பர்களே இன்றைய நாள் மிகவும் அருமையான நாள். இன்று பல்வேறு தெய்வங்களுக்கு உகந்த நாள். இந்த பதிவுகளை உடனுக்குடன் உங்கள் இமெயில் பெற subscribe செய்யுங்கள். அல்லது கமெண்டில் உங்கள் மெயில் id பதிவு செய்யுங்கள். சரி இந்த நாளின் முக்கியத்துவத்தை காண்போம். இந்த மாதம் புரட்டாசி மாதம் இந்த மாதம் முழுவதுமே பெருமாளை தொழுவதற்கான மாதம் ஆகும். இந்த நாள் சோமவாரம் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை . இந்த நாளின் நட்சத்திரம் கார்த்திகை முருகப்பெருமானை வழிபட மிக உகந்த நாளான இன்று தம்பியோடு இணைந்து ஆசி வழங்க வரும் அண்ணனாம் விநாயகப் பெருமானை வணங்க கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளாகும் மேலும் இன்று வள்ளலாரின் பிறந்த நாளாகும். இப்படி அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக வரும் இந்நாளில் அனைவரும் குடும்பத்துடன் ஆலயம் சென்று வழிபடுங்கள்
திருச்செந்தூர் முருகன் |
- Get link
- X
- Other Apps
திருச்செந்தூர் என எழுதும் போதே அந்த நீண்ட கடலும் அதன் முன்னே உயரமாக நிற்கும் அந்த கோபுரமும் கண்முன்னே வருகிறது. மேலும் முருகப்பெருமானின் பெருமையை விளக்கும் படியாக பல்வேறு அதிசயங்கள் நிகழ்நத தலம் திருச்செந்தூர். முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது. திருச்செந்தூர் கடலில் குளித்து விட்டு கடற்கரையோரம் உள்ள நாழி கிணற்றில் குளித்தாள் தீராத நோயும் தீரும் என்கிறார்கள்.சூரபத்மனை எதிர்த்து போரிட தன்னோடு வந்த படைவீரர்களின் தாகம் தணிக்க முருகபெருமான் இந்த கிணற்றை தோற்றுவித்தாக கூறுகிறார்கள். இங்கு வழங்கும் பன்னீர் இலை விபுதி சக்தி மிக்கது. சூரபத்மனை வதம் செய்த பின்பு தன்னை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்பிரமணிய சுவாமி தன் பன்னிரு கையாலே விபுதி பிரசாதம் வழ...
ஆடித்தபசு விழா
- Get link
- X
- Other Apps
#வரராசைபுரம்....இந்த ஊர் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒரு ஊரா... கேள்விப்பட்ட மாதிரியே இல்லை என்பவர்கள், இந்தப் பட்டியலைப் படித்தால், உடனே இந்த ஊருக்குப் புறப்பட்டு விடுவீர்கள். இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாமனநிலையும் ஏற்படும். ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர். செவ்வாயன்று விரமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். புதனன்று விரதமிருப்பவர்கள் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். வியாழன்று விரதமிருந்தால், ஆசிரியர் பதவி பெறலாம். (டி.இ.டி. தேர்வு எழுதுவோர் சென்று வரலாம்) வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப் போல் செல்வவளத்துடன் வாழ்வர். சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்க்குணங்கள் நீங்கப்பெறுவர். ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்த...
சத்தியமங்கலத்தில் 'பெரிய கோயில்' ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி கோயில்
- Get link
- X
- Other Apps