இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை

            மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது உலக புகழ் பெற்றது அந்த மீனாட்சி அம்மனின் வரலாறுடன் தொடர்பு கொண்ட மதுரையில் உள்ள முக்கியமான ஒரு திருத்தலம் இந்த இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில். மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்திற்கு மிக அருகிலும் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் அருகிலும் உள்ளது.

மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சி அம்மனை மணமுடித்த சுந்தரேஸ்வரர்(சிவபெருமான்) திருமணத்திற்கு பிறகு மலையத்துவஜன்
ஆண்ட மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்கும் முன்பு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்து பொறுப்பேற்று கொண்டார். அப்படி சிவபெருமானே சிவலிங்கத்தை பூஜித்த ஸ்தலம் இதுவாகும்.

இத்திரு கோவிலானது மேற்கு நோக்கி உள்ளது. இங்கு சிவலிங்கமானது கிழக்கி நோக்கி இருக்க சிவபெருமானும் அன்னையும் மேற்கு நோக்கி  இருந்து சிவலிங்கத்தை பூஜிக்கும் வகையில் இருப்பதால் நாம் லிங்கத்தின் பின்புறத்தை தரிசிக்கும் படியாக வித்தியாசமாக அமையபெற்ற ஸ்தலம் ஆகும்.

இம்மை மறுமை என இரு வகையான பிறவிகளில் இம்மை பிறவி (இந்த பிறவி ) யில் செய்த நல்லவற்றிற்கு மறுமை வரை காத்திராமல் இந்த பிறவியிலே நன்மையை வழங்குவதால் இம்மையில் நன்மை செய்வார் திருக்கோவில் என பெயர் பெற்றது.

மதுரையில் உள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் இது நிலத்திற்கு உண்டான ஸ்தலம்.

இத் திருகோவிலில் முருகபெருமானை வேண்டி கொண்டு முருக பெருமானுக்கு அம்மன் கோவிலை போன்று பூக்குழி இறங்கும் வழக்கம் உள்ளது. வைகாசி விசாகத்தின் மறுநாள் இந்த பூக்குழி இறங்கும் வழக்கம் உள்ளது

தாயார் :  மத்தியபுரி நாயகி
தல விருட்சம் : தசதள வில்வம்
தீர்த்தம் : ஸ்ரீ புஷ்கரணி

முகவரி :
இம்மையிலும் நன்மை தருவார் கோவில்
மேலமாசி வீதி
பெரியார் பேருந்து நிலையம் அருகில்
மதுரை
தமிழ்நாடு - 625001

கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 6.15 முதல் 11.30 வரை
மாலை 4.30 முதல் 9.30 வரை

இங்கு நடக்கும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது ஆகும் மதியம் மூன்று மணியிலிருந்து பிரதோஷ பூஜைகள் தொடங்கி விடும்

இங்கு முருகப்பெருமனுடைய திருப்புகழை பாடும் திருப்புகழ் சபை உள்ளது.தினம் தோறும் இரவு 7.30 முதல்  8.30 வரை பாடப் படுகிறது 





  

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்