செண்பகவல்லி அம்மன் கோவில்

செண்பகவல்லி அம்மன் கோவில்

       

ஏழு அடியில் நின்ற நிலையில் ஒளி வீசும் கருணையான திருமுகம் கொண்ட செண்பகவல்லி அம்மனின் தரிசனம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது .கிழக்கு நோக்கி தனி சன்னிதியில்அம்மன்  எழுந்து அருளியிருக்கும் இத்திருக்கோவில் மதுரையை மீனாட்சி அம்மனை போன்றே அம்மனுக்காக சிறப்பு பெற்ற கோவிலாகும். 

மூலவர் : பூவநாதர்
தாயர் : செண்பகவல்லி அம்மன்
ஊர் : கோவில்பட்டி
மாவட்டம் : தூத்துக்குடி


திறக்கும் நேரம் :

காலை6 மணி முதல் 11 மணி வரை மலை 4 மணி முதல் 8 மணி வரை

அம்மனுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவிலையும் கோவிற்புரியையும் (இன்று கோவில்பட்டி ) அமைத்து 
சாப நிவர்த்தி பெற்ற செண்பக மன்னனால்இக்கோவில் தோற்றுவிக்கபட்டதால் இக்கோவில் செண்பகவல்லி அம்மன் கோவில் என வழங்க பெற்றது .

சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்பு தலைவர்கள் இறைவனை பூவான பூக்களால் அர்ச்சித்து வந்தால் இங்கு இருக்கும் மூலவர் பூவனநாதர்
என்று அழைக்கபடுகிறார்.

அகத்தியர் தோற்றுவித்த அகத்தியர் தீர்த்தம் இங்கு உள்ளதால் இங்கு வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கும் என நம்பிக்கை உள்ளது.

கிழக்கு நோக்கியவாறு தாயர் செண்பகவல்லி அம்மனும் மற்றும் இறைவன் பூவனநாதரும் தனி தனி சந்நிதியில் உள்ளனர் .மதுரை மீனாட்சி அம்மனை
போன்று இங்கும் அம்மனை வணங்கிய பிறகே எம்பெருமானை வணங்க செல்கின்றனர் 

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்