அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் !!
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் !!
மூலவர் : காயாரோகணேஸ்வரர்.
தல விருட்சம் : மாமரம் உள்ளது.
பழமை 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : நாகப்பட்டினம்.
மாவட்டம் : நாகப்பட்டினம்.
தல வரலாறு :
🌟 கண்ணுவரின் ஆலோசனைப்படி முக்தி வேண்டி இத்தலத்தில் ஒரு முனிவர் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், முனிவரை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, முக்தி கொடுத்தார். முக்தியடைபவர்களின் ஆன்மாதான், இறைவனிடம் சென்று சேரும்.
🌟 ஆனால், சிவபெருமான் அந்த முனிவரின் உடலில் காயம் ஏற்பட்டதால் தன்னுடன் ஆரோகணித்து முக்தி கொடுத்தார். இதனால் சிவன், காயாரோகணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
🌟 நாக அரசன், இங்கு சிவனை வேண்டி ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை, பிறப்பிலேயே மூன்று தனங்களுடன் இருந்தது. வருந்திய மன்னன், சிவபெருமானிடம் முறையிட்டான்.
🌟 சிவபெருமான் மன்னனிடம், சு ரிய வம்சத்து மன்னன் ஒருவனால் அவளது தனம் மறையும் என்று அருளினார். சிலகாலம் கழித்து, சாலிசுகன் என்னும் மன்னன், இத்தலத்திற்கு வந்தான். அவனைக் கண்ட நாக அரசன் மகளின் மூன்றாவது தனம் மறைந்தது. மகிழ்ந்த நாக அரசன், அவனுக்கே தன் மகளை திருமணம் செய்து வைத்தான்.
🌟 அதன்பின்பு, சாலிசுகன் இங்கு சிவனுக்கு பல திருப்பணிகள் செய்தான். நாக அரசன் பு ஜித்ததால் இத்தலம், நாகை காரோணம் என்று பெயரும் ஏற்பட்டது.
தல பெருமை :
🌟 இத்தலத்தில் உள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறது. இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளை தருவது இதன் சிறப்பம்சமாகும். இம்மரம் கோவிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும்போது, நந்தி வடிவில் தோற்றமளிப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
🌟 இத்தலத்தில் செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
திருவிழா :
🌟 வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பு ரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
செல்லும் வழி :
🌟 நாகப்பட்டினத்தின் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ., தொலைவில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
Comments
Post a Comment