Posts

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம் கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை. முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.   ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.  திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்...

கந்தர் அனுபூதி ஏன் படிக்க வேண்டும்?

  கந்தர் அனுபூதி ஏன் படிக்க வேண்டும்? கந்தர் அனுபூதி என்பது அருணகிரிநாதர் அருளிய மிகப் பெரிய ஆன்மீக நூல். இது முருக பக்தியில் மிக உயர்ந்த அனுபவத்தை தரும். இதைக் படிக்க வேண்டிய முக்கிய காரணங்கள் 👇 1. மன அமைதி கிடைக்கும் 🧘‍♂️ கந்தர் அனுபூதி பாடல்கள் மனதில் இருக்கும் குழப்பம், பயம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைத்து அமைதியை தரும். 2. முருகனுடன் ஆன்மீக இணைப்பு 🙏 இந்தப் பாடல்கள் வெறும் ஸ்லோகம் இல்லை — இது நேரடி அனுபவம். படிக்கும் போது முருகன் உடன் உள்ளார்ந்த இணைப்பு உருவாகும். 3. கெட்ட சக்திகள் விலகும் 🛡️ பழமையான நம்பிக்கையின் படி, கந்தர் அனுபூதி ஜெபம் தீய எண்ணங்கள், துரதிருஷ்டம் போன்றவற்றை நீக்கும். 4. வாழ்க்கை திசை தெளிவு கிடைக்கும் 🌅 பல பாடல்கள் வாழ்க்கையின் உண்மையை உணர வைக்கிறது — “நாம் யார்?”, “எதற்காக பிறந்தோம்?” என்ற கேள்விகளுக்கு பதில் தரும். 5. பக்தி + ஞானம் இரண்டும் தரும் 🔥 இது வெறும் பக்தி பாடல் அல்ல, ஞான நூலும் கூட. மனதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எப்போது படிக்கலாம்? காலை எழுந்த உடன் ☀️ இரவு தூங்கும் முன் 🌙 சஷ்டி நாட்களில் மிகவும் சிறப்பு...

முருகன் தினசரி ஜப மந்திரங்கள்

🕉 முருகன் தினசரி ஜப மந்திரங்கள் 1. காலை – புத்துணர்ச்சி & வெற்றி ஷடக்ஷர மந்திரம் (Six-Syllable Mantra) 🕉 ஓம் ஷண்முகாய நம: (Om Ṣaṇmukhāya Namaḥ) 📿 ஜபம் : 108 முறை (ருத்ராட்சம் அல்லது சந்தன மாலை) பலன் : மன தெளிவு, துணிவு, வாழ்க்கையில் முன்னேற்றம் 2. நண்பகல் – பாதுகாப்பு & சக்தி கந்த சஷ்டி கவசம் (தொடக்க மந்திரம்) "வேலாயுதனுக்கு அரோகரா!" (Velāyudhanukku Arokara!) 📿 ஜபம் : 27, 54 அல்லது 108 முறை பலன் : எதிரிகள், துஷ்ட சக்திகள் விலகும்; உடல் ஆரோக்கியம் மேம்படும் 3. மாலை – ஞானம் & ஆனந்தம் சுப்ரமண்ய காயத்ரி மந்திரம் 🕉 ஓம் ஷண்முகாய வித்மஹே மகாதேவாய தீமஹி தன்ன: ஸ்கந்த: ப்ரசோதயாத் 📿 ஜபம் : 9, 27 அல்லது 54 முறை பலன் : கல்வி, ஆன்மிக வளர்ச்சி, குடும்ப அமைதி வழிபாட்டு குறிப்புகள் வியாழக்கிழமை மற்றும் சஷ்டி நாளில் சிறப்பு ஜபம் செய்யவும் சிவப்பு அல்லது மஞ்சள் மலர் சமர்ப்பிக்கவும் நெய் தீபம் ஏற்றி, மந்திரத்தை மனம் ஒருமுகப்படுத்தி சொல்லவும்

குரு தோஷ நிவாரணத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள்

  🛕 தமிழ்நாட்டில் குரு தோஷ நிவாரணத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள் குரு தோஷம் என்பது ஜாதகத்தில் குரு கிரகத்தின் பாதிப்பு காரணமாக வாழ்க்கையில் தாமதம், பொருளாதார சிரமம், திருமண தடை, கல்வி பிரச்சினைகள் போன்றவை ஏற்படுவதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த பாதிப்பை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் சில புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 1. ஆ ல ங்குடி அபத்சகாயேஸ்வரர் கோவில் இடம் : கும்பகோணம் அருகே, தஞ்சாவூர் மாவட்டம் தெய்வம் : அபத்சகாயேஸ்வரர் (சிவபெருமான்), வலம்புரி வினாயகர், தெய்வநாயகி அம்மன் சிறப்பு : நவகிரகங்களில் குரு பகவானுக்கு சிறப்பான ஸ்தலம். குரு பகவானின் பிரதான ஸ்தலம் (Guru Sthalam). வழிபாடு : குரு பெயர்ச்சி காலத்தில் பசும்பால் அபிஷேகம், மஞ்சள் அர்ச்சனை, வில்வார்ச்சனை. பலன் : கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், பண முன்னேற்றம். 2. திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோவில் இடம் : ராக்க்ஃபோர்ட், திருச்சி தெய்வம் : தாயுமானவர் (சிவன்), மதுரை மீனாட்சி அம்மன் சிறப்பு : திருமண தடை மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு குரு அருள் வேண்டுவதற்கான ச...

நவகிரஹங்களின் சிறப்பு

*நவகிரஹங்களின்_சிறப்பு.(மகத்துவம்)* *01) சூரியன்* காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரஹங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு ~ கிழக்கு. அதிதேவதை ~ அக்னி. ப்ரத்யதி தேவதை ~ ருத்திரன். ஸ்தலம் ~ சூரியனார் கோவில். நிறம் ~ சிவப்பு. வாகனம் ~ ஏழு குதிரைகள் பூட்டிய ரதம். தானியம் ~ கோதுமை. மலர் ~ செந்தாமரை., எருக்கு. வஸ்திரம் ~ சிவப்பு. ரத்தினம் ~ மாணிக்கம். அன்னம் ~ ரவா., கோதுமை., சர்க்கரைப் பொங்கல்.      *02) சந்திரன்* பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும்., தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. திக்கு ~ தென்கிழக்கு. அதிதேவதை ~ ஜலம். ப்ரத்யதி தேவதை ~ கௌரி. ஸ்தலம் ~ திருப்பதி. நிறம் ~ வெள்ளை. வாகனம் ~ வெள்ளைக் குதிரை. தானியம் ~ நெல். மலர் ~ வெள்ளை அரளி. வஸ்திரம் ~ வெள்ளாடை. ரத்தினம் ~ முத்து. அன்னம் ~ தயிர் சாதம். *03) அங்காரஹன் (செவ்வாய்)* இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர்., பாவ/புண்ணிய பலனைக் கொடுக்கும் குருரார். மேஷம்., விருச்சி...

குருந்தமலை

குரு இருந்த மலை " குருந்தமலை" (இன்னொரு பழனி ) - அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயில், காரமடை (கோவை) காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.  சுமார் 750 வருடங்களுக்கு முன் இக்கோவில் உருவானதாக தெரிகிறது. ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை ஒத்து இருக்கின்றன.. செல்வம் பெருகவும், புத்திரபேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேலாயுதனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு "குருந்த மரங்கள்" நிறைய இருந்த காரணத்தால்  குருந்த மலை என பெயர் வந்ததாகவும், அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்தது உபதேசித்ததால் குருந்த மலை என பெயர் வந்ததாகவும் இரு வேறு கருத்துக்கள் உண்டு. ˜மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழநி முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும் நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு அல...

மயிலம் முருகன் சிறப்புகள்

மயிலம் முருகன் சிறப்புகள் - 🌺🌹🌿🌺🌹🌿🌺🌹🌿🌺🌿🌺🌿🌺🌿 🌺🌿1. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது. 🌺🌿2. முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். 🌺🌿3. கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. 🌺🌿4. மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை. 🌺🌿5. மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது. 🌺🌿6. மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. 🌺🌿7. பாலசித்தர் தவம் புரியும...

திருவெண்காடு

ஏழு ஜென்ம கர்மவினை பதிவில் இருந்து விடுபட திருவெண்காடு சூர்ய தீரத்தம்,சந்திர தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம்(முக்குளங்களில்) நீராடும் வழிபாடு:  தலைக்குமேல் சிறிய இலையில் பச்சை பயிறு வைத்து கொண்டு தம்பதி சமேதராக திருவெண்காடு தலத்தில் உள்ள அக்கினி, சூரிய, சந்திர ஆகிய மூன்று தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில் மூழ்கி நீராடி புதன் கிரகம்,மற்றும் இத்தலத்தில் உள்ள மூன்று மூர்த்திகளான சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தியையும் மற்றும் இத்தலத்தில் உள்ள மூன்று சக்திகளான பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை ஆகியோரையும் இத்தலத்தில் உள்ள மூன்று தலவிருட்சங்களான வடவால், வில்வம், கொன்றையையும்,இத்தலத்தின். சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதத்தையும் தரிசனம் செய்பவர்களது ஏழு ஜென்ம கர்ம வினை பதிவிலிருந்தும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெறுவார்கள் இது நடை முறையில் கண்ட உண்மை . திருவெண்காடு தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் 21 தலைமுறையில் வருகின்ற பிதுர...

திருமுருகன்பூண்டி

திருமுருகன்பூண்டி - திருப்பூர் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ மாதவனேஸ் வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு. தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது ஸ்தல புராணம். சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப்...

முருகன் தகவல்கள்

முருகன் தகவல்கள் !.. கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே ‘பரப்ரம்ஹம்’ என உறுதியாகக் கூறுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் தம் கந்தபுராணத்தின் பல இடங்களில் முருகன் மும்மூர்த்தி வடிவினன் என்று குறிப்பிடுகிறார். முருகப்பெருமானை உபாசிக்கும் அடியார்களுக்கு பயம், அழிவு, சத்ரு, வியாதி இவை அனைத்துமே அண்டாது. முருகனின் வேலாயுதம் சக்தி மிக்கது. ‘வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை’ என்ற பழமொழியே உள்ளது முருகனை கிருத்திகை நட்சத்திர தினத்தன்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் வழிபட்டு தீபம், மணி சமர்ப்பித்தால் வாக்கு மேன்மை ஏற்படும் என்கி றது சிவபுராணம். தட்சிணாமூர்த்தி வடிவில் தான் சனத்குமாரருக்கு செய்த உபதேசங்களை அவர் முழுமையாகக் கற்றுக் கொண்ட தால், ஈசனாக தான் அவரிடமிருந்து உபதேசம் பெற விரும்பினார். அவரைத் திருப்திப்படுத்தவே சனத்குமாரர் முருகனாக தோன்றி உபதேசம் செய்தார் என்பார்கள். விஸ்வாமித்திரருடன் கானகம் சென்ற ராம-லட்சு மணரை ஈசனின் பின்னால் செல்லும் இரு முருகன்கள் போல் தோன்றினர் என்று தன் ராமாயணத் தில் விவரிக்கிறார், வால்மீகிமுனிவர். கம்பன் தன் ராமாயண யுத்த காண்டத்திலே இந்திரஜித்தை முருகனுக்கு ...

வல்லக்கோட்டை முருகன் ஆலயம்

வல்லக்கோட்டை முருகன் ஆலயம்  #murugantemples பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம். 💥புறநானூறில் முருகனைப் பற்றிய குறிப்பு உள்ளது. திருச்செந்தூர் முருகனை செந்தில் என்று அழைத்தார்கள். பழங்காலத்தில் திருச்செந்தூருக்கு 'அல்வாய்' எ பெயரும் இருந்தது. அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்தப் பாட்டில் கூறப்பட்டு உள்ளது. 💥பண்டையத் தமிழர்கள் காடுகள், நதிகள், தீவுகள், சாலை ஓரங்கள், குளங்கள், புத்தம் புதிய கடம்பு மரங்கள் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பண்டையத் தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை திரு முருகாற்று...

கஞ்சமலை சித்தர் கோவில்

 கஞ்சமலை  கஞ்சமலை , இது ஒர் அதிசயமலை !! பலருக்கும் தெரியாத ஒரு மலை !! சித்தர்கள் வாழ்ந்த மலை !! இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை !!. கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. சேலம் மாநகரத்திலிருந்து வடமேற்கு திசையில் இம்மலை அமைந்துள்ளது.  சேலத்திலிருந்து இளம்பிள்ளைக்குச் செல்லும் வழியில் மூடுதுறை, முருங்கப்பட்டி என்ற கிராமங்களுக்கு தெற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த மலையின் அடிவாரத்தில் சித்தர் கோயில் உள்ளது. இளம்பிள்ளை, நல்லணம்பட்டி கிராமத்திற்கு கிழக்கிலும் மலையின் உச்சியில் மேல்சித்தர் கோயில், கரியபெருமாள் கோயில் ஆகியன உள்ளன. மலைக் கோவிலுக்கு சித்தர் கோவில் அடிவாரத்தில் இருந்தும், முருங்கப்பட்டி மலை அடிவாரத்தில் இருந்தும் செல்லலாம்.  சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது, இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது. மேல்சித்தர் கோயில் அருகில் ஒரு ஊற்றும் நீரோடையும் நல்...

பழமுதிர்சோலை முருகன்

#பழமுதிர்சோலை #முருகன் தொடர்ச்சியாக 15 வாரம் பழமுதிர்சோலை ஸ்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். *#குழந்தை பாக்கியம் அருளும் #பழமுதிர்சோலை #முருகன்* தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்வழக்கு இருந்தாலும், முருகப்பெருமானுக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் ஆறுபடை வீடு என்பது முக்கியமானது. ஆறுபடை வீடுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். இந்த ஆறுபடை வீடுகளில் 6-வது தலமாக விளங்குவது ‘பழமுதிர்சோலை’ திருத்தலம். இயற்கை எழில் சூழ்ந்த சிறப்புமிக்க திருத்தலம் இது. இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. மற்ற படைவீடுகளில் இல்லாத சிறப்பு அது என்றால் மிகையல்ல. ஆம்.. ஆறுபடை வீடுகளில் இந்த படைவீட்டில் மட்டும் தான் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை என தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழை வளர்த்தபடி, முருகனையே நினைத்து பாடல்களைப் பாடியவர் அவ்வையார். அவர் ஒருமுறை இந்த ...

பூமிநாதர் திருக்கோவில்

நிலம் வாங்கும் முன்னும், வீடு கட்டுவதற்கு முன்னும், வீடு கட்டும் போது தடை ஏற்பட்டாலும் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும். அது என்ன கோவில்... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள  அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் தான் அது. இங்கு மூலவர் பூமிநாதர், தாயார்   அறம்வளர்த்த நாயகி இது  500 வருடங்கள் பழமையான கோவில். அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களைத் தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமான் கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் மு...

வல்லக்கோட்டை முருகன் கோவில்

 பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பிவைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். 🌺🌿அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் “பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால்தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங் கினார். “துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி ப...

இலஞ்சி முருகன்

இலஞ்சி முருகன் 💥முருகனுக்குரிய பிரதான ஆலயங்களில் இலஞ்சியும் ஒன்று. அருணகிரிநாதர், ‘இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே’ என்று இந்த முருகனை பாடியுள்ளார். வள்ளி-தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தனிச் சந்நதியில் அருள்கிறார். 💥 திருச்செந்தூர் புராணத்தில் இலஞ்சி முருகனைப்பற்றி, ‘தேவர் மூவராவது நாமேயென்று’ என்று தொடங்கும் பாடல், வரதராஜகுமாரனென முருகனைப் புகழ்கிறது. வேண்டுவோருக்கு வரம் கொடுக்கும் வள்ளல் இந்த ராஜன் என்கிறது. 💥எது பிரம்மம் என்று காசிப முனிவரும், கபிலரும், துர்வாசரும் வாதம் புரிந்தனர். துர்வாசர் முருகனை நோக்கித் துதிக்க, மும்மூர்த்திகளும் நானே என்று முருகன் காட்சி அளித்தார். அவர்களின் ஐயங்களையும் போக்கினார். ரிஷிகளின் வேண்டுதலுக்கு இணங்கி முருகப் பெருமான் இங்கு எழுந்தருளினார். 💥இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை, மகிழ மரம் என பல பொருள்படும். ஆனாலும், இன்றைய பேச்சு வழக்கில், ஊரைக் குறிக்கும் ஆகு பெயராகவே வழங்கப்படுகிறது. 💥 ஐப்பசி கந்த சஷ்டி திருநாளில் முதல் நாள் முதல் ஐந்து நாட்களுக்கு முறையே அயன், அரி, அரன், மகேஸ்வரன், சதாசிவனாகவும் கோலம் பூண்டருள்வா...

போற்றித்திருவிருத்தம் மற்றும் போற்றிவிண்ணப்பம்

முருகப்பெருமானின் அருள் வழங்கும் போற்றித்திருவிருத்தம் (திருவருட்பா) மற்றும் போற்றிவிண்ணப்பம் (பாம்பன் சுவாமிகள்)    திருச்சிற்றம்பலம் 1. கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி  அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி  பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி  சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.  2. பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி  இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி  துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி  தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.  3. மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி  தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி  கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி  குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.  4. தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி  பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி  நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி  சிவம்பெறும் பயனே போற்றி செங்க...

சாயாவனேஸ்வரர் கோவில்

சங்கடங்கள் தீர்க்கும் வில்லேந்திய வேலவன் அமர்ந்த சாயாவனேஸ்வரர் கோவில்  🌺🌿சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி சிறிது தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று. 🌺🌿இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோவிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்த...

எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்) திருப்புகழ்

எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்)  (வைத்தீசுரன் கோயில் புள்ளிருக்குவேளூர் என வழங்கப்படும். இறைவன் வைத்தீசுரன் என்னும் வைத்திய நாதப் பெருமான். அம்பாள்  தையல்நாயகி. இங்கு முருகனுக்கு  முத்துக்குமரன் என்னும் திருநாமம். இத்தலம் மிகவும் பிரசித்தமான பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. நாம் எத்தனையோ ஜன்மம் எடுத்து துன்பப்பட்டுவிட்டோம். இனி முருகன் பாதம் அடைந்து அருள் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திருப்புகழ் படித்து முருகன் அருள் பெறலாம். எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமா...

சென்னிமலை முருகன்

சென்னி மலை (சஷ்டிக் கவசம் அரங்கேறிய தலம்):   🌺🌹🥀🌿🌺🥀🌹🌿🌺🥀🌹🌿🌺🥀🌹🌿🌺🥀🌹🌿🌺🥀🌹 🌺சென்னி மலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருந்திய திருத்தலம். இத்தலம் 'சிரகிரி' என்னும் பெயராலும் அறியப் படுகிறது (சென்னி என்பது 'சிரம்' எனவும், மலை என்பது 'கிரி' எனவும் பொருள்படும்). 'சஷ்டிக் கவசம்' என்னும் சக்தி வாய்ந்த பாராயணப் பாடலை 'பாலன் தேவராய சுவாமிகள்' இத்தலத்திலேயே அரங்கேற்றம் செய்து அருளினார். 🌺மூலவர் 'சிரகிரி வேலவர்' என்னும் திருநாமம் தாங்கி எழுந்தருளி உள்ளார். சஷ்டிக் கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற பாடல் வரியில் தேவராய சுவாமிகள் குறிப்பது இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானையே. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை போற்றிப் பாடி மகிழந்துள்ளார்.  🌺இம்மலைக் கோயில் 1320 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் 'சிரகிரி வேலவர்' பால உருவத்திலும், ஸ்ரீவள்ளி அம்மை - தெய்வயானைத் தாயார் இருவரும் தவக்கோலத்திலும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இத்தலத்தில் எழுந்தருளிய நிகழ்வு அற்புதம் நிறைந்தது. 🌺ஆதியில்,...