திருவெண்காடு
ஏழு ஜென்ம கர்மவினை பதிவில் இருந்து விடுபட திருவெண்காடு சூர்ய தீரத்தம்,சந்திர தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம்(முக்குளங்களில்) நீராடும் வழிபாடு:
தலைக்குமேல் சிறிய இலையில் பச்சை பயிறு வைத்து கொண்டு தம்பதி சமேதராக திருவெண்காடு தலத்தில் உள்ள அக்கினி, சூரிய, சந்திர ஆகிய மூன்று தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில் மூழ்கி நீராடி புதன் கிரகம்,மற்றும் இத்தலத்தில் உள்ள மூன்று மூர்த்திகளான சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தியையும் மற்றும்
இத்தலத்தில் உள்ள மூன்று சக்திகளான பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை ஆகியோரையும் இத்தலத்தில் உள்ள மூன்று தலவிருட்சங்களான வடவால், வில்வம், கொன்றையையும்,இத்தலத்தின்.
சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதத்தையும் தரிசனம் செய்பவர்களது ஏழு ஜென்ம கர்ம வினை பதிவிலிருந்தும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெறுவார்கள் இது நடை முறையில் கண்ட உண்மை .
திருவெண்காடு தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். (இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா)
பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது.
கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி.
மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.
இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் எப்போதும் ஆனந்த நடனம் புரிந்து கொண்டிருக்கும் சுவேதாரண்யேஸ்வர சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
Comments
Post a Comment