சிவன் மலை உத்தரவு பெட்டியில் வேல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வேறு எந்த முருகன் கோவிலும் இல்லாத சிறப்பம்சமாக இங்கு ஆண்டவரின் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது.
முருகப்பெருமான் ஒருவரின் கனவில் தோன்றி குறிப்பிட்டு ஒரு பொருளைக் கூறி அதனைக் கோவில் முன் மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் அதனை வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற அந்த பக்தர் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் சென்று கூறினால் அவர்கள் சாமியிடம் பூ போட்டு கேட்டுவிட்டு பின்பு அந்த பக்தரின் கனவில் வந்த அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இதற்காக கால நிர்ணயம் கிடையாது.
மீண்டும் வேறு ஒருவரின் கனவில் வந்து வேறு ஒரு பொருளை வைக்கும் வரை இந்த பொருள் இருக்கும்.
தற்போது இங்கு உத்தரவு பெட்டியில் வேல் வைக்க உத்தரவு வந்துள்ளது. இப்போது அங்கு வேல் வைத்து உள்ளார்கள்.
Comments
Post a Comment