கந்தகோட்டம்
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம்
ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி
உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
-மகான் இராமலிங்க சுவாமிகள்
உரை:
கந்தகோட்டத்தில் குடிகொண்ட முருகா, உனது திருவடியை தினமும் முழுமனதுடன் தியானிக்கின்ற உத்தமர்களின் தொடர்பு கிட்ட வேண்டும். மனதில் ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு வெளியே வேறான்றாகப் பேசுகின்ற பொய்யர்களின் தொடர்பு சேராமை வேண்டும்.பெருமையுடன் உனது கீர்த்தியைப் புகழ்ந்து பேசவேண்டும். பெருமைமிக்க சன்மார்க்க நெறியை கடைப்பிடித்து செல்ல வேண்டும். செருக்கு என்னும் பேய் பிடிக்காதிருக்க வேண்டும். பெண் ஆசையை மறக்கேண்டும். உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும். நல்லறிவு வேண்டும். உனது அருள் வேண்டும். பிணியில்லாத ஆரோக்ய வாழ்வு நான் வாழ வேண்டும்.
Comments
Post a Comment