கழுகுமலை ஸ்ரீபைரவர்

கழுகுமலை ஸ்ரீபைரவர் அபார வெற்றி தரும் ஸ்ரீபைரவர் தரிசனம் - கழுகுமலை ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்.. இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தானுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான். அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது. குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும்...