Posts

அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை

வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டியது அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்  பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.  இரவு அர்த்த ஜாமத்தில்  மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும். இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.  மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூ...

மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்

மதுரையில் மீனாட்சி தினமும்  8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.  இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.  அவை .. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி ப்ராத சந்தியில் – பாலா 6 – 8 நாழிகை வரையில் –  புவனேஸ்வரி 12 – 15 நாழிகை வரையில் – கெளரி மத்யானத்தில் – சியாமளா சாயரக்ஷையில் – மாதங்கி அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.  இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.  அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும். *ஒரேநாளில்* *புவனேஸ்வரி*, *கௌரி,சியாமளா*, *மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள த...

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள்

  மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை 1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்', 2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்', 3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்', 4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்', 5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள் அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் . அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார். சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள். சீறா நாகம் - நாகமலை கறவா பசு - பசுமலை பிளிறா யானை - யானைமலை முட்டா காளை - திருப்பாலை ஓடா மான் - சிலைமான் வாடா மலை - அழகர்மலை காயா பாறை - வாடிப்பட்டி பாடா குயில் - குயில்க...

அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

Image
அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி  திருக்கோயில்  அருணகிரிநாதருக்கு முருகபெருமான் வேடன் வடிவில் வந்து இந்த கோவிலுக்குவர வழி காட்டிய ஸ்தலம்.முருகபெருமானின் அருள் நிறைந்த            தலம் என்று குறிப்பிடும் படியாக மயில்கள் இந்த மலையில் நிறைந்து காணபடுகின்றன.    திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் இருந்து ௨௦க்ம தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது  கோவிலின் வரலாறு  அன்றைய நாட்களில் வாகை எனும் மரங்கள் இங்கு நிறைந்து இருந்தன. அந்த காலத்தில் வேடன் ஒருவன் வேங்கையை துரத்தி சென்றான். அப்போது அவனுக்கு போக்கு காட்டிய வேங்கை இங்கும் அங்கும் ஓடியது. அதனை அவன் துரத்தி சென்றான். முடிவில் அது இங்கு வந்து இங்குள்ள வாகை மரத்தின் இடையில் மறைந்து போனது. அப்போது அங்கு திடீர் என்று மயில் தோன்றியது மேலும் விபுதி வாசனை தோன்றியது. அதை கண்ட வேடன் இங்குள்ள மக்களிடம் எடுத்துக்கூறி இங்கு முருகனுக்கு ஆலயம் அமைந்ததாக வரலாறு கூறுகிறது.    

குசமாகி யாருமலை(திருவான்மியூர்) திருப்புகழ்

குசமாகி யாருமலை(திருவான்மியூர்) குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை குடிலான ஆல்வயிறு                  குழையூடே குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்      குழல்கார தானகுண                   மிலிமாதர் புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி      புலையேனு லாவிமிகு              புணர்வாகிப் புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை      பொலிவான பாதமல               ரருள்வாயே நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு      நிகழ்பொத மானபர             முருகோனே நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு      நிபுணாநி சாசரர்கள்                குலகாலா திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி      சிவநாத ராலமயில்              ...

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் படபெற்ற திருத்தலங்கள்

1. அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் , மயிலாப்பூர், சென்னை  மூலவராக கபாலீஸ்வரர் மற்றும் தாயாராக கற்பகாம்பாள் அருள் பலிக்க கூடிய இத்திருதலத்தில் உள்ள சிங்காரவேலர் (முருக பெருமான் ) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழை பாடி அருளி உள்ளார். இங்கு பாடிய திருப்புகழ் பாடல்கள்  1.அமரும் அமரர்  2.அயில் ஒத்து எழும்  3.அறமிலா அதி  4.இகல வருதிரை  5.இனையது இலதாம்  6.கடிய வேக  7.களபம் மணி ஆரம் 8.திரைவார் கடல்  9.நிறைதரு மணியணி  10.வரும் மயில் ஒத்தவர் என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன  2.அருள்மிகு  கந்தசுவாமி கோவில், திருப்போரூர்,  காஞ்சிபுரம் மாவட்டம்  இங்கு மூலவராக கந்தசுவாமி அருள்பாலிக்கும் திருத்தலம் . சமராபுரி வாழ் சண்முகத்தரசே என கந்த சஷ்டியில் வரும் வரிகள் இத்தலத்தை குறிக்கின்றன . அனுத்தே னர்மொழி     உருக்கு ஆர் வாழி  சீர் உலாவிய  திமிர மாமன  என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன  3.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவ...

இடரினும் தளரினும் - செல்வம் பெருக தொழில் சிறக்க படிக்க வேண்டிய பதிகம்

 திருச்சிற்றம்பலம்  இந்த பதிகமானது திருஞானசம்பந்தர் அவர்களால் திருவாடுதுறை தலத்தில் இருக்கும் இறைவனை வேண்டி பாடப்பெற்ற பதிகம். இதில் திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்கு பொருள் வேண்டி பாடிய பதிகம். உலக நன்மைக்காய் செய்யும் வேள்விக்கு இறைவனிடம் பொருள் வேண்டி பாடிய பதிகம். தொழில் சிறக்க வருமானம் பெருக படித்து வரலாம் .    இடரினுந் தளரினும் எனதுறுநோய்   தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்   கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை   மிடறினில் அடக்கிய வேதியனே   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….1    வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்  வீழினும் உனகழல் விடுவேனல்லேன்  தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்  போழிள மதிவைத்த புண்ணியனே  இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்  அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….2   நனவினுங் கனவினும் நம்பாவுன்னை  மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்  புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த  கனலெரி யனல்புல்கு கையவனே  இதுவோஎமை ...