குசமாகி யாருமலை(திருவான்மியூர்) திருப்புகழ்

குசமாகி யாருமலை(திருவான்மியூர்)


குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை

குடிலான ஆல்வயிறு                  குழையூடே

குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்

     குழல்கார தானகுண                   மிலிமாதர்

புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி

     புலையேனு லாவிமிகு              புணர்வாகிப்

புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை

     பொலிவான பாதமல               ரருள்வாயே

நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு

     நிகழ்பொத மானபர             முருகோனே

நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு

     நிபுணாநி சாசரர்கள்                குலகாலா

திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி

     சிவநாத ராலமயில்                                  அமுதேசர்

திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்

     திருவான்மி யூர்மருவு                   பெருமாளே.


Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்