மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்
மதுரையில் மீனாட்சி தினமும்
8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.
இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
அவை ..
திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் –
புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி
மத்யானத்தில் – சியாமளா
சாயரக்ஷையில் – மாதங்கி
அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி
பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி
அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.
காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.
இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.
*ஒரேநாளில்* *புவனேஸ்வரி*,
*கௌரி,சியாமளா*,
*மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்*
Comments
Post a Comment