கோயில் கந்தன்குடி முருகன்

கோயில் கந்தன்குடி முருகன் 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள கோயில் கந்தன்குடி கிராமத்தில் புகழ்பெற்ற வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஸ்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம். இரண்டு அசுரர்களால் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு அழிவு ஏற்படும் என அன்னை பராசக்தி நினைத்த காரணத்தினால், தன்னுடன் வந்த குழந்தையான முருகனைத் தங்கி இருக்கும்படி கூறியதால், முருகன் தங்கிய இந்த ஸ்தலம், கந்தன்குடி என பெயர் பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் முருகப் பெருமானை மணக்கோலம் கொள்ள, ஸ்ரீதேவசேனா அன்னை தவம் பூண்டு தென்திசை நோக்கி தனி ஆலயம் கொண்டு விளங்கி வருகிறார்.

தேவேந்திரன், ஐராவதம் என்று சொல்லக்கூடிய இரட்டை தந்தங்களுடைய வெள்ளை யானையை, தனது மகனின் தவத்தைக் காக்க கந்தன்குடிக்கு அனுப்பியதால், ஸ்ரீ முருகப் பெருமானுக்கு எதிரில் இங்கு ஐராவதம் வாகனமாக காட்சியளிப்பது தனி சிறப்பு
.

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்