அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் !!
அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் !!
தேனி மாவட்டம் வீரபாண்டி எனும் ஊரில் அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் அமைந்துள்ளது.
மூலவர் : கண்ணீஸ்வரமுடையார்
தாயார் : அறம்வளர்த்த நாயகி
தீர்த்தம் : முல்லையாறு
ஊர் : வீரபாண்டி
மாவட்டம் : தேனி
தல வரலாறு :
பாண்டிய நாட்டை வீரபாண்டிய மன்னன் ஆண்டு வந்தார். பார்வையோடு இருந்த அவருக்கு முன்வினைப் பயனால் பார்வை போனது.
அவர் பட்ட மனவருத்தத்துக்கு அளவே இல்லை. கஷ்டம் வரும்போது கடவுளை நினைக்காதவர் உலகில் யாரும் இல்லை.
வீரபாண்டிய மன்னரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் சிவபெருமானை உணர்ச்சி பெருக்குடன் வணங்கினார். அவரது அறிவுரைப்படி முல்லையாற்றங்கரையிலுள்ள கௌரிமாரியை வணங்கச் சென்றார்.
கருணைத்தாயான கௌரிமாரி, அவருக்கு ஒரு கண் பார்வையைக் கொடுத்தாள். மறுகண் ஒளி பெற, தான் வணங்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அறிவுறுத்தினாள்.
வீரபாண்டியரும் அவ்வாறே செய்தார். சிவன் மன்னரிடம் தனக்கொரு கோவிலை எழுப்பும்படி கூறினார். அவ்வாறு எழுந்ததே கண்ணீஸ்வரமுடையார் கோவில். பின்னர் வீரபாண்டியனின் மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது.
தலப்பெருமை :
இத்தல அம்பிகை அறம்வளர்த்த நாயகி கருணைக் கடலாய் அருள்புரிகிறாள்.
மன்னனின் பெயரால் இவ்வூர் 'வீரபாண்டி" என பெயர் பெற்றது.
தலச்சிறப்பு :
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களை தீர்க்கும் மூலிகை சக்தி நிறைந்த முல்லையாறு இக்கோவிலின் அருகில் ஓடுவது மிகவும் சிறப்பாகும்.
பிரார்த்தனை :
பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
Lucky Club Casino site review – The best casino
ReplyDeleteLucky Club Casino was one luckyclub of the first casinos on the market to be certified as "A Member of the" in 2021 by the Malta Gaming Authority. The Lucky Club Casino is part of