அரங்கநாதசாமி கோவில், காரமடை..

அரங்கநாதசாமி கோவில்,
காரமடை..

அரங்கநாத சாமி கோவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது.

அமைவிடம் தொகு
கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) உள்ள காரமடை என்னும் ஊரில் கோயம்புத்தூரிலிருந்து சுமார் 27 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

#கோயில் அமைப்பு..

இக்கோயிலின் மூலவரான அரங்கநாத சுவாமி சன்னிதானத்துக்கு வலப்புறம் அரங்கநாயகித் தாயார் சன்னிதியும் இடப்புறம் ஆண்டாள் சன்னிதியும் முன்புறம் கருடக் கம்பமும் உள்ளன. அரங்கநாயகித் தாயார் சன்னிதிக்கு வலப்புறம் பரவாசுதேவர் சன்னிதியும் 12 ஆழ்வார்களின் திருவுருவங்களும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆண்டாள் சன்னிதிக்கு இடப்புறம் வீரஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

#தலம் சிறப்பு..

மூலவர் அரங்கநாத சுவாமி

உற்சவர் வெங்கடேசப்பெருமாள்

அம்மன்/தாயார் அரங்கநாயகி அம்மன்

தல விருட்சம் காரை மரம்

தீர்த்தம் பிரம்ம, கருட மற்றும் அஷ்டதீர்த்தம்

ஆகமம்/பூஜை பாஞ்சராத்ரம்

பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்

#தல வரலாறு...

இப்பகுதியில் அதிகமாக காரைப் பசுக்கள் மற்றும் காரை மரங்கள் இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. ஒருகாலத்தில் இங்குள்ள தொட்டியர் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஆடு, மாடுகளை அதிக அளவில் வைத்து இருந்தனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு காரைப் பசு தனியாக சென்று வருவதைக் கால்நடைகளை மேய்க்கக் கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் அம்மாட்டினைப் பின் தொடர்ந்து சென்றார். அது ஓரிடத்தில் காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட ரத்தம் சொட்டியது. இதனைக் கண்ட அந்த தொட்டியர் தனது கண்பார்வையை இழந்தார். அவ்விடத்தில் கோவில் கட்டி வழிபடும்படி அசிரிரீ ஒலித்தது. அப்பசுவின் உரிமையாளருக்கும் கண்பார்வை திரும்பியது. சந்தனக் காப்பிட்டுப் பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டார். அவ்விடத்தில் பெருமாளுக்குக் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இன்றும் பெருமாளின் மீது வெட்டுக்காயம் காணப்படுகிறது.

#நம்பிக்கைகள்...

திருமலை நாயக்கர் கொடிய நோய் ஒன்றில் அவதிப்பட்டார் அவர் இக்கோவிலுக்கு வந்து வேண்டியதால் அந்நோய் தீர்ந்தது. அந்நோய் தீர்ந்த காரணத்தால் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வழிபட்டு வந்த சிறிய கோவிலை கோபுரங்கள் அமைத்து தற்போது உள்ள கோவிலை அமைத்தார். இக்கோவிலில் உள்ள காரை என்னும் ஒரு வகை மரம் தலவிருட்சமாக உள்ளது. இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் வரும் என்று நம்புகின்றனர் .

#திருவிழாக்கள் ...

மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா , மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகம் , ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்து பலர் இக்கோவிலுக்கு வருகின்றனர். இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா புகழ்பெற்றது .

மாசி மகம்
புரட்டாசி சனிக்கிழமைகள்
வைகுண்ட ஏகாதசி
போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .

#தேர்த்திருவிழா..

இக்கோயிலில் மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பானது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியாகத் தெருக்களில் துஷ்ட சக்திகளை விரட்ட அஷ்டபலி எனப்படும் கிராமசாந்தியும். அடுத்து துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்தினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் பெருமாள் அன்னவாகனம், சிங்கவாகனம், அனுமந்தவாகனம் எனத் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். அடுத்த நாள் பெருமாளிடம் கோபித்துக் கொண்டு அருகிலுள்ள பெட்டதாபுரம் மலையில் அமர்ந்திருக்கும் அரங்கநாயகித் தாயாரை அழைத்து வந்து ஆண்டாளுடன் யானை வாகனத்தில் தோன்றுகிறார். அதற்கடுத்த நாள் காலை திருக்கல்யாண உற்சவமும் மாலை தேர் உற்சவம் நடைபெறும். தேருக்கு அடுத்த நாள் இரவு குதிரை வாகனத்தில் பாரிவேட்டை, மறுநாள் காலை சேஷ வாகனத்தில் தெப்பத்தேர். இறுதியாகத் தாயார் மீண்டும் கோபித்துக்கொண்டு மலைக்குச் செல்லும் நிகழ்வோடு விழா நிறைவுபெறும்.

பூஜை நேரம்...

காலை 5 .30 மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோவில் திறந்தே இருக்கும். மலைக்கோவிலின் (பெட்டதாபுரம்) அருகில் இயற்கையான சிறிய அருவி ஒன்றும் உள்ளது

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

திருக்கொள்ளிக்காடு - வேலை கிடைக்க வழிபட வேண்டிய ஆலயம்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்