சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்
சூரசம்ஹாரம் நடைபெற்ற மற்றும் ஸ்ரீ கந்தர் சஷ்டிதிருவிழா கொண்டாட படுகின்ற திருச்செந்தூர் திருக்கோவில்
➖➖➖➖➖➖➖
ஸ்ரீ கந்தர் சஷ்டி
➖➖➖➖➖➖➖
சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் ஜடா
முடியுடன் தவக் கோலத்தில் திருச்செந்தூரில்
காட்சி தருகிறார்
சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது
கையில் தாமரை மலர் இருக்கிறது
திருச்செந்தூரில் மூலவர் சிலைக்குப் பின்னால் முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் சிவலிங்கம் ஒன்று இருக்கிறது அதற்கு
முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு
பூசை செய்யப்படுகிறது
*** *** ***
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவந்த தீயிலிருந்து பிறந்ததால்
முருகப் பெருமானுக்கு " சிவந்தியப்பர் "
என்ற பெயரும் உண்டு
திருச்செந்தூர் தன் மருமகன் சூரனுடன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம்
திருச்செந்தூரில் வீரபாகுதேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு
" வீரபாகு பட்டினம் " என்ற பெயரும் உண்டு
*** *** ***
மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது .சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடை
கள் அணிவிக்கப்படும்
திருச்செந்தூரில் தினமும் செந்திலாண்டவரை உச்சிக்காலத்தில் கங்காதேவி வழிபடுவதாக
ஐதீகம்
உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திர
த்தில் பால் மற்றும் அன்னம்எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள் இதற்கு கங்கை பூஜை என்று பெயர்
*** *** ***
திருச்செந்தூரில் முருகனுக்கு எதிரே இரண்டு மயில்கள் மற்றும் காளை ஆகியவை வாகனங்களாக இருக்கின்றன
சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு
மட்டுமே நடைபெறுகிறது
முருகப் பெருமானோடு திருச்செந்தூரில்
போரிட்ட படை வீரர்கள் " அய்யனார்கள் "
என்று அழைக்கப்பட்டார்கள்
*** *** ***
கோயிலுக்குச் செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது இவரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்க வேண்டும் என்பது ஐதிகம்
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்
ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும் சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திரு
மண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்
ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்
*** *** ***
இந்தியாவில் வடக்கில் இருந்து தெற்காகப்
பாயும் ஜீவ நதிகள் இரண்டு ஒன்று கங்கை ; மற்றொன்று தாமிரபரணி அதனால் கங்கை யில் நீராட முடியாதவர்கள் தாமிரபரணியில்
நீராடி இறையருள் பெறலாம்
சூரசம்காரத்தை முடித்துத் திரும்பும் முருகப் பெருமானின் கோபத்தைத் தணிக்க மஞ்சள்
நீராட்டு வைபவம் நடைபெறுகிறது
*** *** ***
ஸ்ரீ கந்தர்சஷ்டி திருநாளில்
முருகப்பெருமானை வணங்கி பேரருள் பெறு வோம் அனைவருக்கும் ஸ்ரீ கந்தர்சஷ்டி சூரசம் ஹாரம் பெருவிழா வாழ்த்துக்கள்
Comments
Post a Comment