Posts

அறுபடை வீடு

சித்தர்கள் , ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா? மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. அறுபடை வீடுகள்: 1. திருப்பரங்குன்றம் 2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் 3. திருவாவினன்குடி (எ) பழனி 4. திருவேரகம் (எ) சுவாமிமலை 5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல் 6. பழமுதிர்சோலை. அவை முறையே..... 1. ஆரோக்கியத்திற்கு - சுவாமிமலை 2. உறவுக்கு - திருப்பரங்குன்றம் 3. பொருளாதார வசதிக்கு -  சோலைமலை 4. பாதுகாப்புக்கு -  திருச்செந்தூர் 5. ஆளுமை திறனுக்கு - திருத்தணி 6. ஞானம் பெற – பழநி. திருப்பரங்குன்றம் : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இது ஒரு குடைவரை கோவில் ஆகும்.முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை த...

இராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்கள்

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்! இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவ...

108 லிங்க நாமங்கள்

ராவணசம்கிதை என்ற நூலில் ராவணனால் சொல்லி பூஜிக்கப்பட்ட 108 லிங்க நாமங்கள் 1. ஓம் *லிங்க மூர்த்தயே* நம 2. ஓம் *சிவலிங்காய* நம 3. ஓம் *அத்புத லிங்காய* நம 4. ஓம் *அனுகத லிங்காய* நம 5. ஓம் *அ...

கழுகுமலை ஸ்ரீபைரவர்

Image
கழுகுமலை ஸ்ரீபைரவர் அபார வெற்றி தரும் ஸ்ரீபைரவர் தரிசனம்  - கழுகுமலை ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்.. இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தானுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான். அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது. குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும்...

செண்பகவல்லி அம்மன் கோவில்

Image
செண்பகவல்லி அம்மன் கோவில்         ஏழு அடியில் நின்ற நிலையில் ஒளி வீசும் கருணையான திருமுகம் கொண்ட செண்பகவல்லி அம்மனின் தரிசனம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது .கிழக்கு நோக்கி தனி சன்னிதியில்அம்மன்  எழுந்து அருளியிருக்கும் இத்திருக்கோவில் மதுரையை மீனாட்சி அம்மனை போன்றே அம்மனுக்காக சிறப்பு பெற்ற கோவிலாகும்.  மூலவர் : பூவநாதர் தாயர் : செண்பகவல்லி அம்மன் ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி திறக்கும் நேரம் : காலை6 மணி முதல் 11 மணி வரை மலை 4 மணி முதல் 8 மணி வரை அம்மனுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவிலையும் கோவிற்புரியையும் (இன்று கோவில்பட்டி ) அமைத்து  சாப நிவர்த்தி பெற்ற செண்பக மன்னனால்இக்கோவில் தோற்றுவிக்கபட்டதால் இக்கோவில் செண்பகவல்லி அம்மன் கோவில் என வழங்க பெற்றது . சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்பு தலைவர்கள் இறைவனை பூவான பூக்களால் அர்ச்சித்து வந்தால் இங்கு இருக்கும் மூலவர் பூவனநாதர் என்று அழைக்கபடுகிறார். அகத்தியர் தோற்றுவித்த அகத்தியர் தீர்த்தம் இங்கு உள்ளதால் இங்கு வழிபட்ட...

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை             மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது உலக புகழ் பெற்றது அந்த மீனாட்சி அம்மனின் வரலாறுடன் தொடர்பு கொண்ட மதுரையில் உள்ள முக்கியமான ஒரு திருத்தலம் இந்த இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில். மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்திற்கு மிக அருகிலும் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் அருகிலும் உள்ளது. மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சி அம்மனை மணமுடித்த சுந்தரேஸ்வரர்(சிவபெருமான்) திருமணத்திற்கு பிறகு மலையத்துவஜன் ஆண்ட மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்கும் முன்பு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்து பொறுப்பேற்று கொண்டார். அப்படி சிவபெருமானே சிவலிங்கத்தை பூஜித்த ஸ்தலம் இதுவாகும். இத்திரு கோவிலானது மேற்கு நோக்கி உள்ளது. இங்கு சிவலிங்கமானது கிழக்கி நோக்கி இருக்க சிவபெருமானும் அன்னையும் மேற்கு நோக்கி  இருந்து சிவலிங்கத்தை பூஜிக்கும் வகையில் இருப்பதால் நாம் லிங்கத்தின் பின்புறத்தை தரிசிக்கும் படியாக வித்தியாசமாக அமையபெற்ற ஸ்தலம் ஆகும். இம்மை மறுமை என இரு வகையான பிறவிகளில் இம்மை பிறவி (இந்த பிறவி ) யில் செய்த நல்லவற்...

அமிர்தகடேசர் திருக்கடம்பூர் திருக்கோவில்

Image
அமிர்தகடேசர் திருக்கடம்பூர் திருக்கோவில்                             மூலவர்: அமிர்தகடேஸ்வரர் உற்சவர்: சோமாஸ்கந்தர் அம்மன்: வித்யூஜோதிநாயகி தல விருட்சம்: கடம்பமரம் தீர்த்தம்: சக்தி தீர்த்தம் புராண பெயர்: திருக்கடம்பூர் ஊர்: மேலக்கடம்பூர் மாவட்டம்: கடலூர் மாநிலம்: தமிழ்நாடு அபிராமி அம்மன் சந்நிதி                 நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின...