அருள் மழை பொழியும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
அருள் மழை பொழியும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் #ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம்.யானை பூஜித்ததால் இது #யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் #உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் *ஜம்புவனம், *ஜம்புகேஸ்வரம், *ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 🌀பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். 51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் #வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. 🌀காஞ்சிப் பெரியவர் #அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த #சிவசக்ரம்,#ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார். 🌀சிவன் கட்டளைக்காக அம்பிகை,பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறந்தாள்.இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள்.சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது. 🌀பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார...