அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அருணகிரிநாதருக்கு முருகபெருமான் வேடன் வடிவில் வந்து இந்த கோவிலுக்குவர வழி காட்டிய ஸ்தலம்.முருகபெருமானின் அருள் நிறைந்த தலம் என்று குறிப்பிடும் படியாக மயில்கள் இந்த மலையில் நிறைந்து காணபடுகின்றன. திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் இருந்து ௨௦க்ம தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது கோவிலின் வரலாறு அன்றைய நாட்களில் வாகை எனும் மரங்கள் இங்கு நிறைந்து இருந்தன. அந்த காலத்தில் வேடன் ஒருவன் வேங்கையை துரத்தி சென்றான். அப்போது அவனுக்கு போக்கு காட்டிய வேங்கை இங்கும் அங்கும் ஓடியது. அதனை அவன் துரத்தி சென்றான். முடிவில் அது இங்கு வந்து இங்குள்ள வாகை மரத்தின் இடையில் மறைந்து போனது. அப்போது அங்கு திடீர் என்று மயில் தோன்றியது மேலும் விபுதி வாசனை தோன்றியது. அதை கண்ட வேடன் இங்குள்ள மக்களிடம் எடுத்துக்கூறி இங்கு முருகனுக்கு ஆலயம் அமைந்ததாக வரலாறு கூறுகிறது.