கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் படிக்க புண்ணியம் வேண்டும் மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள். இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்! இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சு...