Posts

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள் ராமேஸ்வரம், திருராமேஸ்வரம், குருவிராமேஸ்வரம், காமேஸ்வரம் ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன. இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்' எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில்,  ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன. தொடர்ந்து நான்கு மாதங்கள்... ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில், ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும். 1. ராமேஸ்வரம் தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம். ஸ்ரீராமர் - சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்...

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள் தெரியுமா? 1   ஆகாயம்: சென்னையில் அமைந்திருக்கும் ஆகாயஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும்.இதன் மூலவர் திருமூலநாதசுவாமி ஆவார். NO:112,அவதான பாப்பையா தெரு,சூளை , சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில்  சென்னை-112 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. 7C, 7B, 7D, 164, 59, 159 என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். காலை 6 மணி முதல் 11.30 வரையிலும்,மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும். தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு 8.30க்கு நடைபெற்றுவருகிறது. 2   மண்: சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மனுடன் அருள் புரிந்து வருகிறார். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில் வன்னிமரத...

ஓதிமலை முருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முக...

திருக்கொள்ளிக்காடு - வேலை கிடைக்க வழிபட வேண்டிய ஆலயம்

வேலை கிடைக்கவில்லையா? இத்தலத்திற்கு செல்லுங்கள்..!!                                     திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்..!!                    இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படும் பட்டதாரிகளும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என தேடி அலைவபர்களும் வழிபடக்கூடிய ஆலயம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் . ஆலயத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு :  மூலவர் : அக்னீஸ்வர சுவாமி   தாயார் :  மிருது பாத நாயகி   சனி பகவான் : பொங்கு சனி   முருகர்  : தனுசு சுப்பிரமணிய சுவாமி  ஸ்தல விருட்சம் : வில்வம்  தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்                                இது 1000 முதல்  2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு ஸ்தலம்.  இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக ...

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

Image
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்   மாயாண்டி சுவாமிகள் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்  மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி திருக்கூடல் மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,  அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சீடர் அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க  சுவாமிகள் விலாசம் திருக்கூடல் மலை, புசுண்டர் மலை,  திருப்பரம்குன்றம், மதுரை -625005       சோமப்ப சுவாமிகள்:          மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது, அருள்மிகு மூக்கையா சுவாமிகள் ஜீவசமாதி மதுரை மூக்கையா ஜீவசமாதி      மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.அவனியாபுரம் - திருப்பரம்குன்றம் சாலையில் இருந்து தியகராஜர் கல்லுரி செல்ல...

சித்தர்கள் ஜீவ சமாதி

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._ *1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். *2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார். *3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார். *4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார். *5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார். *6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார். *7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார். *8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார். *9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார். *10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார். *11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார். *12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார். *13....

உங்கள் நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். ஆலயங்களும், அமைவிடங்களும் அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்* இருப்பிடம்:திருவாரூரில் இருந்து ...