பூமிநாதர் திருக்கோவில்
நிலம் வாங்கும் முன்னும், வீடு கட்டுவதற்கு முன்னும், வீடு கட்டும் போது தடை ஏற்பட்டாலும் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும். அது என்ன கோவில்... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் தான் அது. இங்கு மூலவர் பூமிநாதர், தாயார் அறம்வளர்த்த நாயகி இது 500 வருடங்கள் பழமையான கோவில். அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களைத் தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமான் கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் மு...